மூன்று தோல்விகள்
பொதுவாக நாம் அனைவரும் வெற்றி-தோல்வி என்பதை புறப்பொருட்கள் சார்ந்தவை என்றே பழக்கிவைக்கப்பட்டிருக்கிறோம். புறப்பொருள் வெற்றி என்பது அவ்வக்கணங்களில் குதூகலத்தையோ துயரத்தையோ அளிக்கும் என்றாலும் நீண்ட நோக்கில் அவற்றிற்கு பெரிய மதிப்பு ஏதும் இல்லை. 'உண்பது நாழி உடுப்பது இரண்டு' என்பதும் 'மண்ணாள்பவர் ஆயினும் முடிவில் ஒரு பிடி சாம்பல்' என்பதும் நம் முன்னோர் வாக்கு. இவைகளைச் சுற்றி நம் வாழ்வை வடித்துக் கொண்டோம் எனில் வாழும் காலத்திலேயே நம் வாழ்க்கை பொருளற்றதாகிவிடும். பணம், பொன், பதவி இவை யாவும் வாழும் காலத்தில் நமக்கு உபயோகமான கருவிகள்தாம் எனினும் அவையாவும் நம் வாழ்க்கைக்கு எவ்வகையிலும் பொருள் தருவதில்லை.
பாலவயதில்
சிறுவர் பூங்காவிற்கு நாம் அனைவரும் சென்றிருப்போம். அங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் அனைத்தையும் நம் ஒத்தவர்களுடன் சேர்ந்து குதூகலமாக அனுபவித்திருப்போம். அப்பொழுதெல்லாம் அந்த உபகரணங்களை நாம் நமக்கானது என்று உரிமைக் கொண்டாடினோமா? நம் வீட்டுக்கு அவற்றை கொண்டு சென்று நமக்கானவை ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று விரும்பினோமா? மாறாக அப்பொருட்களை அந்நிலையிலேயே அனுபவிக்க மட்டும் அல்லவா தலைப்பட்டோம். பூங்காவிலிருந்து வெளியேறும்போதும் அந்த உபகரணங்களை அங்கேயே விட்டுச் செல்கிறோம் என்று நாம் விசனப்படவில்லை. மாறாக அங்கு நாம் விளையாடி மகிழ்ந்தது குறித்த நினைவுகளோடு ஆட்டமும் நடையுமாக அல்லவா நாம் வீடுகளுக்கு திரும்பினோம். காரணம், நாம் உணர்ந்திருந்தோம் விளையாட்டின் மகிழ்ச்சி மட்டுமே பொருள் நிறைந்தது என்று. உபகரணங்கள் அங்கேயே கிடப்பவை, அவற்றை விளையாடாமல் வெறுமனே சொந்தம் கொண்டாடுவதால் லாபம் இல்லை. எந்த சிறுவன் அத்துனை உபகரணங்களையும் தன் நண்பர்களோடு பகிர்ந்துகொள்கிறானோ அவனே பூங்காவை அனுபவித்தவன் ஆகிறான். மாறாக ஒரு உபகரணத்தைச் சொந்தம் கொண்டாடி அதனை வேறெவரும் நெருங்கவிடாத சிறுவன் தன் மகிழ்ச்சியை இழக்கிறான். பிறரால் வெறுக்கப்படுகிறான், அல்லது புறக்கணிக்கப்படுகிறான். சுருக்கமாக பூங்காக்களில் எதன் மீதும் பற்றற்று மகிழ்ச்சியும் அனுபவமுமே தனக்கு சொந்தம் என அறிந்திருக்கும் சிறுவனே மெய்யாக பூங்காவின் பயனை அடைகிறான். அநேகமாக நாம் அனைவரும் அத்தகையதொரு சிறுவனாகவே நம் சிறுவத்தில் திகழ்ந்தோம். வளர வளரத்தான் படிப்படியாக அந்த இயல்பை இழந்து வெறும் கருவிகளில் பற்று கொண்டோம். மெய்ப்பொருளான நிறைவையும் அனுபவத்தையும் இழந்தோம். உலகத்தையே பூங்காவாகக் கொண்டு தம் சிறுவத்தை இழக்காதவர்களே ஏதோ ஒருவகையில் பொருளுள்ள வாழ்க்கையை வாழ்கின்றார். ஏனையோர் அடம் கொண்ட சிறுவனைப் போல் தம் மகிழ்வையும் இழந்து மற்றவர் மகிழ்வையும் கெடுக்கின்றனர். ஆக புறப்பொருட்கள் நம் மகிழ்விற்கு அவசியம் ஆயினும் மகிழ்வென்பது புறப்பொருட்களுக்கு அப்பாற்பட்ட அனுபவம் மட்டுமே. அது முழுக்க நம் மனம் சார்ந்தது. அந்த வகையில் நம் மூன்று பெரும் தோல்விகள் என்பவை புறப்பொருள் சார்ந்தது அல்ல.
புலன்களிடமான தோல்வி
மனத்துடனான தோல்வி
புத்தியுடனான தோல்வி
13/9/2020
Comments
Post a Comment