Posts

Showing posts from October, 2017

அண்ணனாதல்

"நேரா உட்காரு!" முதுகில் தட்டினான் அண்ணன். எல்லாத் தம்பிகளுக்கும் போலவே எனக்கும் முதல் குரு அவந்தான். அழாமல் பள்ளி செல்ல என்னைப் பழக்கியவன் அவன்.. எப்போதும் அவனாய் ஆகிவிட வேண்டும் என்ற ஏக்கம்தான் என் பால்யம் என இன்று நினைவுகூறுகிறேன். அவன் போல் அழகாய் எழுத வேண்டும்; அவன் போல் குறி பார்த்து புளியம்பழம் எறிய வேண்டும்; அவன் போல் துணிச்சலாய் இருக்க வேண்டும்; அவன் போல் உயரத்தில் இருந்து குதிக்க வேண்டும்; அவன் போல் பட்டாசுப்வெடிக்கையில் காது மூடாமல் இருக்க வேண்டும்; அவன்போல் கை விட்டு சைக்கிள் ஓட்ட வேண்டும்.. இன்னும் எத்தனையோ அவன் போல்.. என் எல்லா பிள்ளை முயற்சியும் அவன் போல் ஆக வேண்டும் என்பதன் தொடர்ச்சியாகவே இருந்தது.. அன்றும் அப்படிதான், அவன் போல் ஆக அவனிடம் சைக்கிள் பழகிக் கொண்டிருந்தேன்.  வீட்டில் தின்னக் கிடைக்கும் நொறுக்குப் பண்டத்தில் என் பகுதியின் பாதியை குரு தட்சிணையாகத் தர வேண்டுமென ஒப்பந்தம்.. முழுதும் தரவும் சம்மதம்தான், விரைவில் அவனாக வேண்டுமே..! நேராக அமரும் தோறும் அவன் மீது சரிந்தேன்.. "சாயாதே.." சினந்து கட்டளையிட்டான் நிமிர்ந்து அமர்ந்தேன்.. "ஹ