அண்ணனாதல்
"நேரா உட்காரு!"
முதுகில் தட்டினான் அண்ணன்.
எல்லாத் தம்பிகளுக்கும் போலவே எனக்கும் முதல் குரு அவந்தான்.
அழாமல் பள்ளி செல்ல என்னைப் பழக்கியவன் அவன்..
எப்போதும் அவனாய் ஆகிவிட வேண்டும் என்ற ஏக்கம்தான் என்
பால்யம் என இன்று நினைவுகூறுகிறேன்.
அவன் போல் அழகாய் எழுத வேண்டும்;
அவன் போல் குறி பார்த்து புளியம்பழம் எறிய வேண்டும்;
அவன் போல் துணிச்சலாய் இருக்க வேண்டும்;
அவன் போல் உயரத்தில் இருந்து குதிக்க வேண்டும்;
அவன் போல் பட்டாசுப்வெடிக்கையில் காது மூடாமல் இருக்க வேண்டும்;
அவன்போல் கை விட்டு சைக்கிள் ஓட்ட வேண்டும்..
இன்னும் எத்தனையோ அவன் போல்..
என் எல்லா பிள்ளை முயற்சியும்
அவன் போல் ஆக வேண்டும் என்பதன் தொடர்ச்சியாகவே இருந்தது..
அன்றும் அப்படிதான், அவன் போல் ஆக அவனிடம் சைக்கிள் பழகிக் கொண்டிருந்தேன்.

வீட்டில் தின்னக் கிடைக்கும் நொறுக்குப் பண்டத்தில்
என் பகுதியின் பாதியை குரு தட்சிணையாகத் தர வேண்டுமென ஒப்பந்தம்..
முழுதும் தரவும் சம்மதம்தான், விரைவில் அவனாக வேண்டுமே..!
நேராக அமரும் தோறும் அவன் மீது சரிந்தேன்..
"சாயாதே.." சினந்து கட்டளையிட்டான் நிமிர்ந்து அமர்ந்தேன்..
"ஹேண்டில் பாரை இறுகப் பிடி.." "ஆட்டாதே.."
"நேராகப் பார்"
கட்டளைகள் வந்து கொண்டே இருந்தன.. ஆனால் அனைத்தையும் நினைவில் கொண்டு பின்பற்றத்தான் இயலவில்லை..
அவனோ கண்டிப்பான குரு வேறு..
கடுப்பானால் அப்படியே விட்டுவிட்டு சென்று விடுவான்..
அப்புறம் மணி வாடகை எடுத்த அந்த குட்டி மிதிவண்டியை உருட்டிக் கொண்டே அலைய வேண்டியதுதான். அரை மணி நேர ராணுவப் பயிற்சியில் இருவரும் சோர்ந்து ஓய்வுக்காக அமர்ந்தோம்.. நான் கேட்டேன்..
"நீ கையை விட்டு சைக்கிள் ஓட்டுகிறாய்.. சாய்ந்தும் பின்னால் திரும்பிப் பார்த்தபடியும் கூட ஓட்டுகிறாயே? நான் மட்டும் நிமிர்ந்து கெட்டியாய் ஹேண்டில் பிடித்துதான் ஓட்ட வேண்டுமா?"
அவனை சந்தேகமாகக் கேட்டேன். எனக்கு சைக்கிள் ஓட்ட வேண்டும் என்பதைவிட அவனைப் போல் ஓட்ட வேண்டும் என்பதுதான் முக்கியம்.. சிறிது யோசித்து விட்டு,
"கத்துக்கும் போது அப்படித்தான்.. நேரா உக்காந்து டைட்டா பிடிச்சு ஓட்டனும். கத்துகிட்டா நம் இஷ்டத்துக்கு ஓட்டலாம்" என்றான்.
நான் அவனைத் தீவிரமாக சந்தேகித்தேன்.. மிதிவண்டிக்கு பழகியவனிடம் ஒரு மாதிரியும் புதியவனிடம் வேறு மாதிரியும் நடக்கும் அறிவு இருக்க வாய்ப்பில்லை எனத் தோன்றியது. அவனிடம் இதைக் கூற பயம். ஆனால் அந்த சந்தேகத்தில் அவனில் இருந்து என் பிரக்ஞை பிரிந்து தனித்து என்னை உணர்ந்தேன் முதல் முறையாய்.
ஒரு வழியாய் சைக்கிள் என் கட்டுப்பாட்டுள் வந்து தனித்து நான் ஓட்டத் தொடங்கியதும் குதூகலித்தபடி அவன் என் சைக்கிளுக்கு முன் ஓடி மகிழ்ச்சியில் குதித்தான். ஒரு ஆசிரியனாய் அவன் மகிழ்ச்சியை பார்த்த கணத்தில் நானும் அவனைப் போல் யாருக்கேனும் கற்றுத் தர வேண்டும் என யோசிக்கத் தொடங்கிவிட்டேன்..

பின்னொரு நாளில்
"கடுப்பா இருக்கு சார்.. சனிக்கிழமை கூட காலேஜ் வைக்கிறாங்க.. படிப்புதான் வாழ்க்கையா.. எப்போதான் வாழுறது..? எப்போ பாத்தாலும் டெஸ்ட், கிளாஸ், சிலபஸ்னு.. என்ன வாழ்க்கையோ"
என் மாணவன் சலித்துக் கொண்டபோது அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. சிறிது யோசித்துவிட்டு, "கத்துக்கும்போது அப்படிதான்.. அப்றம் எப்டி வேணாலும் நம் இஷ்டத்துக்கு வாழலாம்" என்றபோது என் அண்ணனின் புன்னகை கண்களுக்குள் மின்னி மறைந்தது.

Comments
Post a Comment