கனவுலகம்
கனவுகளால் ஒரு உலகம் சிருஷ்டி.
உள்ளே போய் கதவடைத்துக்கொள்
உன் மகிழ்ச்சி, உன் துயரம்
உன் வெற்றி-தோல்வி
உன் நம்பிக்கை, உன் சந்தேகம்
உன் பக்தி-பகுத்தறிவு
உன் பெருமை, உன் அவமானம்
உன் உயர்வு-தாழ்வு
உன் கோபம், உன் ஆசை
உன் ரசனை-வெறுப்பு
யாவுமிருக்கட்டும் பாதுகாப்பாய்
உள்ளேயே..
அறிவாய்;அழுக்கும் கூட
முத்தாகும் ஒருநாள்,
சிப்பிக்குள் அடைகாக்கப்படும்போது..
அன்பிற்கு மட்டும்
அனுமதி தா..
உன் உலகதிற்கு வெளியே
சென்று உலவட்டும்..
அன்பு மட்டுமே அகிலத்திற்க்கும்
உனக்குமான தொடர்பு மொழியாகட்டும்..
உனக்குள் களி கொள்..
உனக்குள்ளே அமைதி கொள்..
புறத்திருந்து உன் உலகம்
உடைய அனுமதிக்காதே..
உள்ளிருந்து அது உடையும்
ஒருநாளுக்காக,
உன் கனவுகளின் கதகதப்பில்
அமைதியுடன் காத்திரு..
இதுவே உன் உயிர் தேடும்
இரண்டாம் கருவறை..
ஆன்மாவின் தவம்..
உலகியல் வாழ்வில் எஞ்சி நிற்கும்
உன்னதங்களின் இருப்பு..
Super Writer Anna....
ReplyDeleteஅன்பிற்கு மட்டும்
அனுமதி தா..
அன்பு மட்டுமே அகிலத்திற்க்கும்
உனக்குமான தொடர்பு மொழியாகட்டும்..
இதுவே உன் உயிர் தேடும்
இரண்டாம் கருவறை..
ஆன்மாவின் தவம்..
உலகியல் வாழ்வில் எஞ்சி நிற்கும்
உன்னதங்களின் இருப்பு..
Nice Anna.....
வாழ்த்துக்கள் அண்ணா...