Posts

Showing posts from 2014

அன்னமய்யா

Image
                            தென்னிந்திய திரையுலகில் கொஞ்சம் வித்தியாசமானவர்கள் தெலுங்கு மக்கள். காதலோ- மோதலோ, செண்டிமெண்டோ- காமடியோ மிகை உணர்ச்சிகளுக்கு பெயர் போனது டோலிவுட். தமிழ் ஹீரோ 20 பேரை அடித்தால் தெலுங்கு ஹீரோ 50 பேரையாவது அடிப்பார். தமிழ் ஹீரோ காதலுக்காக நாக்கை அறுத்தால் தெலுங்கு ஹீரோ கழுத்தை அறுத்துக் கொள்வார். மிகை உணர்ச்சிகள் தமிழ் மக்களுக்கும் பிடித்தவைதான் என்றாலும் டோலிவுட் ரசனைக்கு அவர்கள் இன்னும் வளரவில்லை என்றுதான் தோன்றுகிறது. மிகை உணரச்சிப் படங்களின் மீது என் குழந்தை பருவத்தில் இருந்த ஈர்ப்பு, பதின் பருவங்களில் வடிய தொடங்கியது. தெலுங்கு படங்களுடன் என் அறிமுகம் அன்று அதிகம் இல்லை, (இன்றுவரை குறைவுதான்!) என்றாலும் பார்த்த சில படங்கள் என்னை மிரண்டு ஓட வைத்திருக்கின்றன. அதே காலகட்டத்தில் பின் ஒருநாள் எதேச்சையாக ஏதோ ஒரு தெலுங்கு சேனலில் அன்னமய்யா படத்தை பார்த்தேன்.  நாகர்ஜுன் நடித்தது. அவர் ரட்சகன் மூலம் எனக்கு அறிமுகமாகி இருந்தார். ஆக்சன் படங்களில் ஈடுபாடு மிகுந்த அந்த வயதில் ரட்சகன் என்னை கவர்ந்திருந்தது. ஆகவேதான் அன்னமையாவை சற்று அமர்ந்து பார்த்தேன். சற்றைக்கெ

மண் பயனுற வேண்டும்: தாயிடம் வேண்டல்

Image
மானுடனாய் இந்த தேசத்திலே -எந்த மாதவத்தாலோ நான் பிறந்தேன் மானத்திலே உயர் பாரதத்தாய் -அவள் மடியினில் தவழும் வரம் அடைந்தேன் எத்துனை மதங்கள் எத்துனை இனங்கள் எத்துனை நிறங்கள் அவளிடத்தில் -பின் எத்துனை மொழிகள் எத்துனை வழிகள் எத்துனை விழிகள் அவள் முகத்தில்..! ஐயிறு திங்களே எனைச் சுமந்தாள் -இங்கு அணைத்தெனை வளர்த்திட்ட அன்னையவள் ஆயுளெல்லாம் என்னை சுமக்கின்ற -இந்த அருட்பெரும் தாய்க்குநான் ஏது செய்வேன்..? தேடியே எங்கெங்கோ அலைந்து கண்ட-என் தெய்வமே நீதான் பாரதமே -உனை வாழ்த்திட வார்த்தைகள் எனக்கில்லை -தலை வணங்கிட மட்டுமே நானறிவேன் அன்னை பாரத தேவியளே -இங்கு உன்னை நினைக்கவே உயிர் சுமந்தேன் மணியே, மாதே.. மாசற்றோய் -என் மண்ணே உனை நான் வேண்டுகிறேன் மண் பயனுறுமொரு வாழ்வு கொண்டால்-அதில் என்துயர் யாவையும் நான் மறப்பேன்-இந்த மானுடம் பயனுறும் வாழ்வு தவம் -அதை மறுக்கா தெனக்கே வரமருள்வாய்..

ஓ மனமே..

Image
அங்காடி நாயெனவே அலைந்துழலும் நெஞ்சமது துஞ்சாமல் குடித்திடுமுன் ஆற்றலிலே ஒருபாகம் கோபம் பொறாமையுடன் கொடும் ஆசை பல சேர்ந்து கொறித்தே கொல்வதுந்தன் ஆற்றலிலே ஒருபாகம் கொள்கையில்லா வாழ்க்கையினால் குழப்பத்தால் நீ தினமும் குழிதோண்டி புதைப்பதுந்தன் ஆற்றலிலே ஒருபாகம் திட்டமில்லா செயல்களினால் திடமின்றி விரயமென கட்டம்கட்டி கரைப்பதுந்தன் ஆற்றலிலே ஒருபாகம் துயரம் கழிவிரக்கம் தூங்காமல் செய்துன்னை துடிதுடிக்க கொன்றழிக்கும் ஆற்றலிலே ஒருபாகம் ஏக்கத்தில் ஒருபாகம்-வெறும் தூக்கத்தில் ஒருபாகம் கனவுகளில் ஒருபாகம்-வெறும் நினைவுகளில் ஒருபாகம் உலவுகளில் ஒருபாகம்-வெறும் உணர்ச்சிகளில் பெரும்பாகம் முக்காலே மூணுவீசம் முடியெனவே உதிர்ந்துவிட மிச்சமீதி வழித்ததிலே வாழ்க்கையினை வடிவமைத்தாய்.. நோஞ்சான் பிள்ளையென நொடிந்ததுவும் போனதினில் வியப்பென்ன மனமே.. வீணில் புலம்பாதே..!

தமிழ்

இன்னொரு பிறவினு ஒன்னு இருந்தா நீ ஸ்விட்சர்லாந்த்ல பொற மச்சி.. வேண்டாம் மலேசியா, சிங்கபூர்? வேண்டாம்.. மும்பை, டெல்லி டா..? வேண்டாம் டா.. Atleast, பெங்களூரு? வேண்டாம் மச்சி.. தமிழ் நாடு மட்டும்தான்.. சிலுத்து போச்சு.. தமிழ் மேல உனக்கு அவ்ளோ பாசமா? தெரியல.. ஆனா, எனக்கு அது மட்டும்தான் தெரியும். வேற எங்கனா பொறந்து மொழி தெரியாம சாக சொல்றியா?              உலகத்துல இருக்குற அறிவாளிக பூரா இங்கதாண்டா இருக்கான்.. ஆனா இவனாவது பரவாயில்ல.. இவன் சுயநலம் ரொம்ப வெளிப்படையானது. ஆனா, சில பேர், எதுக்கு கூவறோம்னு தெரியாமலே கூவுறாங்க. தமிழ் மொழிக்கு குறிப்பிட்ட பங்களிப்பு செஞ்சவங்க யாருமே தமிழ், தமிழ்னு இவங்க அளவுக்கு அடிச்சுகிட்டதில்ல. இலக்கிய வாதிகள், மொழி ஆய்வாளர்கள் யாருமே தமிழ் பெருமைய பேசி இருகாங்களே தவிர, தமிழ் மொழி மட்டும்தான்னு பேசினதில்ல. பிற மொழி கலப்பால ஒரு மொழி அழியுமா? அப்டின்னா உலகம் முழுக்க வியாபித்து இருக்குற ஆங்கிலத்த பாருங்க. அந்த மொழியோட பாதி சொற்கள் பிற மொழி வேர் சொற்கள்தான். தமிழ் பிற மொழிகளோட தன்னிலை மாறாம சீரா கலந்ததால தான், தன்னோட சமகால மொழிகள் பல அழிஞ்சாலும்