Posts

Showing posts from August, 2013

உள்ளிருந்து மலர்தல்

Image
        சம்பவங்கள் அல்லது சகநிகழ்வுகளின் தொடர்ச்சியான கோர்வைதான் காலமாக பரிணமிக்கிறது. நிகழ்வுகள் இல்லாத ஓரிடத்தில் காலம் தன் உரு இழந்து காணாமல் போகும். ஒரு விதத்தில் காலமும் மனமும் ஒன்றுதான். காலத்திற்கு சம்பவங்கள் என்றால், மனத்திற்கு எண்ணங்கள். இடையறாத எண்ண ஓட்டங்களே நம் மனதை அடையாளப்படுத்துகிறது. எண்ணங்கள் ஒருமித்து ஒடுங்கும் ஒரு புள்ளியில் மனம் அழிகின்றது.  மனமற்ற நிலை வெறுமை அல்லது ஏகாந்த ம்.       மனமற்ற அந்த நிலையில் பிரபஞ்சப் பருப்பொருட்களிலிருந்து என் சுயம் தன் மாறுபாடுகளை முற்றிலுமாக இழந்து போகின்றது. அது, அவையுடன் கலந்து காணாமல் போகின்றது. அந்த ஒரு புள்ளி வாழ்வின் சம்பவங்களில் அந்தமானது. உண்மையில் அது சுயத்தின் சம்பவமல்ல. சுயத்தின் வெளியில் உள்ள  ஒன்றின்  சம்பவம். சம்பவங்கள் அற்ற சுயத்தின் அந்நிலையில் சுயம் தன் கால பரிமானத்தை முற்றிலுமாக இழக்கிறது. அது ஒருவகையில் தூக்கம் போன்றது  என்றாலும் அது உண்மையில் தூக்கம் இல்லை. தூக்கத்தில் மனம் முற்றிலுமாக ஒடுங்குவதில்லை. மாறாக அது வெறுமனே சற்று ஓய்வு கொள்கிறது. ஆயினும் அது பூரண ஓய்வு அல்ல. கனவுகளில் கால்கள் பாவித்து அது கொள்ளும

வெந்து தணிந்தது..

Image
கங்கை சிந்து காவிரியாய் -நீள் கோதா வரியுடன் சரஸ்வதியாய் பொங்கிய நதிகளை மாதர் என்பார்-நிதம் போற்றியே அவை தினம் தொழுதிடுவார் கலைமகள் மலைமகள் அலைமகளாய் -உயர் காளியாய் மேரியாய் மாரியளாய் - புவி கண்கண்ட தெய்வங்கள் யாவையுமே -இங்கு காரிகை வடிவம் என்றுரைப்பார்   பாரத தாயையும் பெண் என்பார் - மிகை பாரதர் அவள் பெறு பிள்ளை என்பார் மரத்தையும் பசுவையும் பூமியையும்- தினம் மாதர் என்றே அவர் கைதொழுவார் ஈங்கிதைக் கேட்டு வையமெலாம் உள்ள மங்கையர் யாவரும் பாரதத்தில் - வந்து மாதராய் பிறந்திட ஏங்கி நின்றார் - மெய் அறிந்தபின் அவரே மனம் பதைத்தார் கருப்பை சுமப்பது பெண்ணை என்றால் -அந்த கருவறை ஆனது கல்லறையாய்  அதற்கும் தப்பி அவள் பிறந்தால் -உயிர் அறுத்தது நெல்மணி, கள்ளிப் பால் வீட்டினில் பெண்டிரை பூட்டி வைத்தார் -பின் வெளியினில் அனுப்பிட காவல் வைத்தார் தீட்டு என்றே சொல்லித் தள்ளி வைத்தார் -வெறும் மாட்டை விற்பதுபோல் மண முடித்தார் கருப்பை சுமந்திடும் கடவுளவள் - அவள் விருப்பை வெறுப்பை எவர் அறிந்தார்? நெருப்பை நெஞ்சினில் பல காலம் - தம் இருப்பெ

உன்னை நீ அறிவாய்

Image
ஒன்றுண்டு தர்மம் -  இந்த உலகத்தை அது இயக்கும் நன்றதனைத் தெளிந்ததனால் நமனுக்கும் அஞ்சேன் யான் கொன்றுண்டு வாழ்வதற்க்கு குகைவாழும் மிருகமல்ல நன்றுண்டு இரு கைகள் நஞ்சிற்கும் பணியேன் யான் பட்டங்கள் சிலநேரம் பறவைகள் மேல் பறந்து வட்டங்கள் அடிப்பதுண்டு வாய்விட்டும் சிரிப்பதுண்டு கொட்டம் அடிக்கையிலே கொடி சற்றே அறுந்துவிடில் நட்டம் எதற்கென்று ந ன் கறிந்தால் துயரமில்லை   தொங்கும் சிரமெதற்கு? துயரெதற்கு? பயமெதற்கு? பொங்கும் மனத்துள்ளே பொரிந்தெரியும் வலியெதற்கு? மங்கும் விழியெதற்க்கு? மடிகொண்ட உடலெதற்கு? தங்காது என அறிந்தும் தளராத பற்றெதற்க்கு? எங்கும் சோதியுண்டு. இருள் சூழ்ந்த நெஞ்சம் ஏன்? தங்கும் அறிவிருக்க தளர்ந்துவிடும் உள்ளம் ஏன்? கங்கும் தோற்றுவிடும்  கதிரொத்த சிந்தை உண்டு மங்கும் மிடிமை ஏன்? மயக்கம் ஏன்? தயக்கம் ஏன்? உன்னை நீ அறிவாய் உனையன்றி யாரறிவார்? கண்ணை நீ அறிந்தால் காட்சியெலாம் தெளிவாகும் மண்ணை நீ அளப்பாய், மடியுதைத்து நீ எழுந்தால்.. திண்ணை பேச்செதற்க்கு தெளிவாய் எது உண்மையென ..! மிச்சம் எதுவும் வைக்காதே மீண்டும் இல்லை இவ்வாழ்க்கை து

தெய்வங்கள் - சிறுகுறிப்பு

தெய்வங்கள் இரண்டு வகைப்படும்.. ஒன்று, சக்தி இல்லாத தெய்வங்கள்.. இரண்டு, சக்தி உள்ள தெய்வங்கள். சக்தி இல்லாத தெய்வங்களுக்கு கோயிலோ, பூசைகளோ இருப்பதில்லை.. அவைகள் பெரும்பாலும் ஆயுதங்கள் ஏந்தி அறியாதவை.. மனிதரோடு மனிதராக திரிந்தாலும் எவராலும் கண்டுகொள்ளப்படாத அற்ப தெய்வங்கள் இவை.. எந்நேரமும் எதையாவது செய்துகொண்டு அலையும் இந்த தெய்வங்களை அடையாளம் காண்பதும் மிக எளிது. ஒருநாள் நீங்கள் தெருவில் தவறி விழுந்து பாருங்கள்.. பதறி வந்து உங்களை தூக்கும் கரங்கள் இந்த தெய்வங்களுடையதாகவே இருக்கும்.. மருந்து கொஞ்சம் அதிகமாகி சாலை நடுவில் நீங்கள் சரிந்து கிடக்கையில் திட்டியபடி ஒதுங்கி செல்வொருக்கு நடுவே மூக்கை பொத்தியபடி உங்களை ஓரமாக இழுத்து விட்டுவிட்டு கடந்து சென்றதும் இந்த தெய்வங்கள்தான்.. சாதி மதம் இந்த தெய்வங்களுக்கு இருப்பதில்லை.. எவருக்காகவும் எந்நேரமும் கண்ணீர் விடக்கூடிய கூறு கெட்ட தெய்வங்கள்.. காணிக்கை எதையும் இவைகள் ஏற்பதில்லை, பசியுடன் இருந்தால் கூட.. உலகத்தின் பாரம் சுமக்கிறோம் என்ற மனோவியாதி கொண்ட இந்த தெய்வங்கள் சிலநேரம் தம் குடும்பங்களுக்கு மட்டும் துர்கனவாகிப் போகும் கூத்தும் உண்