Posts

Showing posts from April, 2012

இருப்புணர்வு

´Õ Á¨Æ Á¡¨Ä.. Å¡Éìܨà ¸£ú ¾É¢ÂÉ¡ö ¿¡ý. ¸Å¢¨¾ ´ýÚ §¾Ê ±ýÛû ÒÌó§¾ý.. ±ñ½ìÜîºø¸û ¾¡ñÊÂÀÊ ±ý ¯ûÓ¸ôÀ½õ ¦¾¡¼÷ó¾Ð.. ÐÂÃõ ¾ü¦ÀÕ¨Á ¦À¡È¡¨Á §¸¡Àõ ¸¼¨ÁÔ½÷× ¬¨º¸û ¸É׸û ´ù¦Å¡ýÈ¡ö ±¨Éò ¾¡ñÊ §Á§Ä ÀÈì¸, ¿¡§É¡, «Ê §¾Îõ Ü÷ÁÁ¡ö ¯û§Ç.. ¯û§Ç.. §ÁÖõ ¯û§Ç.. ¡×õ Á¨Èó¾ ²§¾¡ µ÷ ¸½ò¾¢ø Ýɢ §ÀáüÈ¢ø ¾ì¨¸Â¡ö Á¢¾ó¾Åý ¿¡É¡ö¾¡ý þÕ츧ÅñÎõ! ¸¡ñÀÅý, ¸¡ðº¢ ±Ûõ §À¾õ «í¸¢ø¨Ä! ÓÊÅ¢øÄ¡¾ §Á¡Éô ¦ÀÕ¦ÅǢ¢ø ¸¡Ä§Á¡ §¾í¸¢Â «Ó¾¡ö.. ¿¡§É¡ «¾¢ø º¢Ú ±ÚõÀ¡ö! ¾¢ÕõÒõ§À¡Ð ±ýÉ¢¼ò¾¢ø ¸Å¢¨¾ ±Ð×õ þø¨Ä.. «¾É¡ø ±ýÉ? ¸ñ¸û ÁÄ÷¨¸Â¢ø ¯Ä¸§Á ±ýÓý «Æ¸¢Â§¾¡÷ ¸Å¢¨¾Â¡ö ¸¢¼ó¾Ð!

விடியல்

# விடியல்வரை    காத்திருந்த ஈசல்கள்,    விடிந்ததும் மடிந்து போகின்றன.!    மடியாமல் ஈசல் பறக்க    விடியாமல் போகாதோ,   பாழும் இருள்...! # விடியல்வரை     காத்திருந்த ஈசல்கள்,   விடிந்ததும் மடிந்து போகின்றன.!    மடியாமல் ஈசல் பறக்க     விடியாமல் போகுமோ,    பாழும் இருள்...! (ஒரே  வார்த்தையில் கவிதைகளின் கரு மாறிப் போவது, ஆச்சர்யமானது. அதுவும் கவிதை இலக்கியத்தின் ஒரு  தனிசிறப் பு என்றும் தோன்றுகிறது. மேலே உள்ள கவிதைகளில் முன்னை கருணையையும், பின்னை மறுமலர்ச்சியையும் கருவாய் கொண்டமைந்து, ஒரே வார்த்தையில் மாற்றம் பெற்றமை, விபத்தேயன்றி திட்டமிட்டதன்று!)    

vali alladhu uyirppu

வலி அல்லது உயிர்ப்பு  எனக்கு வலிக்கிறது.. மகிழ்ச்சி..!  நான் இன்னும் உயிரோடுடன் இருக்கின்றேன். மரித்தபின் வலிக்காதாமே..? மரம் மட்டையாய், கல்லாய் களிமண்ணாய் கண்கள் திறந்தே  நான் மரித்திருக்கும்  தருணங்களிலெல்லாம்  பட்டுத் தெறிக்கும் ஏதேனும் ஒரு வலி என் உயிர்ப்பை என்னுள் இடித்துரைக்கட்டும்..! சகோதரர் சாகையில், ஜனநாயகம் கொல்லும் அரசியல் பூதம் எம்மோரின் மடமை கண்டு நகைக்கையில், என்னவன் ஒருவனின் பிள்ளை தெருவோரம்   தட்டேந்தி நிற்கையில், கண்டும் காணாது நகரும்   என் அறிவில்  எப்போதானும் வெடிக்கும் அந்த உயிர்கொல்லும்  வலி, என் உயிர்ப்பு தன் மரணப் படுக்கையில்  சுவைக்கும் ஜீவத்தின் அமுதமாம்..! எனக்கு வலிக்கிறது.. மகிழ்ச்சி..!