vali alladhu uyirppu

வலி அல்லது உயிர்ப்பு 

எனக்கு வலிக்கிறது..
மகிழ்ச்சி..! 
நான் இன்னும் உயிரோடுடன்
இருக்கின்றேன்.
மரித்தபின்
வலிக்காதாமே..?

மரம் மட்டையாய்,
கல்லாய் களிமண்ணாய்
கண்கள் திறந்தே 
நான் மரித்திருக்கும் 
தருணங்களிலெல்லாம் 
பட்டுத் தெறிக்கும்
ஏதேனும் ஒரு வலி
என் உயிர்ப்பை
என்னுள் இடித்துரைக்கட்டும்..!

சகோதரர் சாகையில்,
ஜனநாயகம் கொல்லும்
அரசியல் பூதம்
எம்மோரின் மடமை கண்டு
நகைக்கையில்,
என்னவன் ஒருவனின் பிள்ளை
தெருவோரம்  
தட்டேந்தி நிற்கையில்,
கண்டும் காணாது நகரும் 
 என் அறிவில்
 எப்போதானும் வெடிக்கும்
அந்த உயிர்கொல்லும்  வலி,
என் உயிர்ப்பு தன் மரணப் படுக்கையில் 
சுவைக்கும்
ஜீவத்தின் அமுதமாம்..!

எனக்கு வலிக்கிறது..
மகிழ்ச்சி..!
       
   
  

       
  
  

Comments

  1. 'Ennavan oruvanin Pillai
    Theruvoram
    thattaendhi nirkaiyil'
    nice Anna...
    Romba nalla irukkunga anna..
    first and last lines
    Super anna...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அழிவின் ஞானம்

Be Present

கனவுலகம்