Posts

Showing posts from December, 2012

குட்டி உலகங்கள்

Image
கடைசியாக அவனும் அவளும் விளையாடத் தொடங்கினார்கள்.. அவள், வர்ஷினி.. பேசத்தெரிந்த  பார்பி பொம்மை.. அவன், கௌசிக். புன்னகைக்க தெரிந்த சின்ன மேகம்... ''என்ன  வெளையாடலாம்?''  இது வர்ஷினி. ''அப்பா அம்மா வெளையாட்டு ?''  இது கௌசிக். ''நான்தான் உன் அம்மா''  வர்ஷினி. ''சரி, அப்போ நான் உன்னோட அப்பா..!''  கௌசிக். தலையாட்டினாள் வர்ஷு. அவள் அவனுக்கு தாலாட்டு பாடினாள். அவன் அவளுக்கு பொம்மை வாங்கி தந்தான். அவள் அவனுக்கு தலை வாரினாள். அவன் அவளை பள்ளியில் கொண்டு விட்டுவந்தான். இனிமையாய் சென்றுகொண்டிருந்த இந்த சிறிய குடியிருப்பில் கரடியாய் நீண்டன இரு தலைகள். ஒன்று அடுத்த வீட்டு அங்கு தாத்தா. மற்றது  கௌசிக்கின் அப்பா லிங்கு. ''என்னடா வெளையாடுரிங்க?'' அங்கு தாத்தா. முந்திக்கொண்டு உற்சாகமாய்  சொன்னான் கௌசிக்,  ''அம்மா அப்பா வெளையாட்டு தாத்தா..!'' ''என்னடா லிங்கு, உன் மகன் டாக்டர் ஆவான்ற நீ.. அவன் அப்பா ஆகணும்கறான் போல..'' லிங்குவை பார்த்து குதர்க்கமாய் கேட்டார் அங்கு.. க

to my friends.(3)

Image
        மேற்க்கண்ட post-ஐ ரொம்ப தாமதமா,  முகநூலில் இன்னைக்குதான் பார்த்தேன். இதை போட்டவன கண்டு பிடிச்சு cyber குற்றங்களுக்கு புதுசா  கொண்டார போகிற குண்டர் சட்டத்துல உள்ள போடணும். இவனுங்கள இப்படியே விட்டா, பாரதிக்கு ஏன் முதல்வர் பதவி தரல, பெரியாருக்கு ஏன் அகில உலக ரசிகர் மன்றம் ஆரம்பிக்கல, காமராசருக்கு ஏன் புரட்சி சூறாவளி பட்டம் தரலனு எல்லாம் கேப்பாங்க. பாரதி  பிறந்தநாள  ஏங்க தொலைக்காட்சிகள் காட்டனும்? யாருங்க அவரு? எத்தன silver jubilee குடுத்துருகாரு? அவருக்கு ஒரு punch  dialogue பேச தெரியுமா?            அவர மக்களுக்கு தெரிஞ்சு என்ன ஆக போகுது? தேவ இல்லாம அவர டிவி ல  காட்டி, அவர் யாருன்னு ஜனங்க யோசிக்க ஆரம்பிச்சா எத்தன பேரு  பொழப்பு கெடும்?  So, இது போன்ற ஆட்களை உடனே கவனிக்கனும்.

To my friens.. (2)

Image
இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்..       இன்று செல்பேசியில் கிருஸ்துவ நண்பர்களைத் தேடி குறுஞ்செய்தியில்  வாழ்த்து அனுப்புவதோடு x-mas முடிந்துபோனது.          2002-2007 வரையிலான  ஐந்து ஆண்டுகளில், தூய நெஞ்சத்தின் கிருஸ்துமஸ் தினங்களை நினைவுகூறுகிறேன். டிசம்பர் தொடக்கத்திலிருந்தே கிருஸ்துமஸ் எதிர்பார்ப்பு தொடங்கிவிடும். feast, Suppose X-mas celebrations, 10 நாள் விடுமுறை என மாதமே அமர்க்களப்படும். மிகவும்  மறக்க முடியாத நாட்கள் அவை. சிறப்பு வழிபாட்டுக்காக கல்லூரி தேவாலயத்தில் மண்டியிட்டும், எழுந்துமாய்  என்ன சொல்கிறார்கள் என புரியாமல் வாயசைத்ததும், சமாதானம் பகிர்ந்ததும் என எத்துனை நினைவுகள்! ஏனோ தேவாலயத்தில் சொன்ன ஏசு சம்மந்தமான செய்திகள் எதுவும் எனக்கு புரிந்ததே இல்லை. ஆனாலும் அவரே கல்லூரியில் என் முதல் நண்பராய்  இருந்தார். தூய நெஞ்சத்தில் என் முதல் காலடிக்கு நல்வரவு கூறியவர் அவர்தான். உண்மைதான். கல்லூரியின் பிரதான நுழைவாயிலில் சற்று உள்ளே  நடுநாயகமாய் நிற்பார் அவர்; தன்  இரு கரங்களை விரித்து அணைப்பதற்கு ஒரு குழந்தையை அழைப்பது போன்ற தோரணையில்; எல்லோரும் என்னிடம் வாருங்கள் எனும்

To my friends..

Image
இந்த வருசத்தோட ஆரம்பத்துல ஒரு டைரி வாங்கினேன். இதே வருசத்தோட ஆரம்பத்துல ஒரு blog-ம்  தொடங்கினேன். பல நேரங்கள்ல நம்மோட கருத்து பரிமாற்றத்துக்கான ஒரு ஊடகம் இல்லாம போறது ரொம்ப சங்கடமான விஷயம் இல்லையா? நம்ம சொல்றத எல்லாம் அமைதியா உள் வாங்கிக்குற ஒரு நண்பனும், நாம கிறுக்குறத எல்லாம் வெளியிடற ஒரு இதழும் கெடைச்சா எவ்ளோ சௌகரியமா இருக்கும்.. அப்டி ஒரு எண்ணத்துலதான், என் மேற்சொன்ன டைரியும், blog-ம். ஆனா பாருங்க, நாயக் கண்டா கல்ல  கானோம், கல்ல கண்டா நாயக் கானோம்னு  சொல்ற மாதிரி டைரி எழுத நேரமோ, blog-la எழுத  பொறுமையோ இல்ல. ஆனாலும், இந்த blog-க்கு உறுப்பினர்கள் விரல் விட்டு எண்ணுகின்ற அளவுக்கு அதிகமா ஆகிட்டதால, ஏதாவது எழுத வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகிப்போச்சு. அதனால வாடிக்கையா இல்லாட்டியும், அவ்வப்போது வேடிக்கையாகவாவது எதையாவது பதிவு செய்யணும்கற முடிவுக்கு வந்துட்டேன். முன்னதாக, இதன் பொருட்டு என் உறுப்பினர்கள் யாரும் தங்கள் உறுப்பினர் அந்தஸ்தை(!) விளக்கிக்கொள்ள  வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.   ஒரு வழியா உலகம் வெற்றிகரமா டிசம்பர் 21-ஐ  கடந்துவிட்டது. உலகம் அவ்ளோ சுலபமா அழிய