To my friens.. (2)
இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்..
இன்று செல்பேசியில் கிருஸ்துவ நண்பர்களைத் தேடி குறுஞ்செய்தியில் வாழ்த்து அனுப்புவதோடு x-mas முடிந்துபோனது.
2002-2007 வரையிலான ஐந்து ஆண்டுகளில், தூய நெஞ்சத்தின் கிருஸ்துமஸ் தினங்களை நினைவுகூறுகிறேன். டிசம்பர் தொடக்கத்திலிருந்தே கிருஸ்துமஸ் எதிர்பார்ப்பு தொடங்கிவிடும். feast, Suppose X-mas celebrations, 10 நாள் விடுமுறை என மாதமே அமர்க்களப்படும். மிகவும் மறக்க முடியாத நாட்கள் அவை. சிறப்பு வழிபாட்டுக்காக கல்லூரி தேவாலயத்தில் மண்டியிட்டும், எழுந்துமாய் என்ன சொல்கிறார்கள் என புரியாமல் வாயசைத்ததும், சமாதானம் பகிர்ந்ததும் என எத்துனை நினைவுகள்! ஏனோ தேவாலயத்தில் சொன்ன ஏசு சம்மந்தமான செய்திகள் எதுவும் எனக்கு புரிந்ததே இல்லை. ஆனாலும் அவரே கல்லூரியில் என் முதல் நண்பராய் இருந்தார். தூய நெஞ்சத்தில் என் முதல் காலடிக்கு நல்வரவு கூறியவர் அவர்தான். உண்மைதான். கல்லூரியின் பிரதான நுழைவாயிலில் சற்று உள்ளே நடுநாயகமாய் நிற்பார் அவர்; தன் இரு கரங்களை விரித்து அணைப்பதற்கு ஒரு குழந்தையை அழைப்பது போன்ற தோரணையில்; எல்லோரும் என்னிடம் வாருங்கள் எனும் வார்த்தைகளுடன்.
தினமும் அவருக்கு ஒரு நண்பனுக்கு சொல்வது போல் புன்னகையுடன் (மெதுவாய்) வணக்கம் சொல்லியபடி (3 years good morning and 2 years good noon) உள்ளே நுழைவேன். இன்று எப்போதேனும் தூய நெஞ்சம் சென்றால், 'என்ன நண்பா, ரொம்ப நாளா ஆளையே காணோம்' னு அவர் சொல்றது எனக்கு மட்டும் கேட்க்கும். இந்த தோழமை, அவரை கடவுளாய் கண்டிருந்தால் நிச்சயம் கிடைத்திருக்காது. என் வரையில் ஏசு வரலாறு கண்ட ஒரு சிறந்த மனிதன். சிறந்த ஆன்மா. சிறந்த புரட்சியாளன். சிறந்த தலைவன்(மேய்ப்பன்). இவைகளைத் தாண்டி கடவுள் என்பதில் என்ன பெரிய சிறப்பு இருக்கப்போகிறது?
நெஞ்சிற்கினிய என் தோழனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :-)
Merry X-mas to all my friends..
Thangalukkum Christmas Vaazhthukkal Writer Anna....... Kavidhai Ezhuthunga Anna.....
ReplyDelete