to my friends.(3)
மேற்க்கண்ட post-ஐ ரொம்ப தாமதமா, முகநூலில் இன்னைக்குதான் பார்த்தேன். இதை போட்டவன கண்டு பிடிச்சு cyber குற்றங்களுக்கு புதுசா கொண்டார போகிற குண்டர் சட்டத்துல உள்ள போடணும். இவனுங்கள இப்படியே விட்டா, பாரதிக்கு ஏன் முதல்வர் பதவி தரல, பெரியாருக்கு ஏன் அகில உலக ரசிகர் மன்றம் ஆரம்பிக்கல, காமராசருக்கு ஏன் புரட்சி சூறாவளி பட்டம் தரலனு எல்லாம் கேப்பாங்க. பாரதி பிறந்தநாள ஏங்க தொலைக்காட்சிகள் காட்டனும்? யாருங்க அவரு? எத்தன silver jubilee குடுத்துருகாரு? அவருக்கு ஒரு punch dialogue பேச தெரியுமா?
அவர மக்களுக்கு தெரிஞ்சு என்ன ஆக போகுது? தேவ இல்லாம அவர டிவி ல காட்டி, அவர் யாருன்னு ஜனங்க யோசிக்க ஆரம்பிச்சா எத்தன பேரு பொழப்பு கெடும்? So, இது போன்ற ஆட்களை உடனே கவனிக்கனும்.
Writer Anna enakku oru doubt, Naan face book la illa. but, intha post ah neenga dhana pottenga?
ReplyDelete