Posts

Showing posts from November, 2013

பால்யம்

தொடக்கப் பள்ளி நாட்களில் நாலணாவை கையில் வைத்துக்கொண்டு மிட்டாய் வாங்க நான் நிற்கும் கடை இன்று முற்றிலுமாக இடிக்கப் பட்டிருப்பதைக் கண்டேன். தாத்தாவின் பொடி முதல் வீட்டின் மளிகைத் தேவைகள் வரையென சில ஆயிரம் முறைக்குக் குறையாமல் நான் அந்த கடை முன் நின்றிருப்பேன். இன்று, வெறித்த அந்த இடம், நின்று யோசிக்க நேரம் தொலைத்துபோன என் பால்யத்தை எனக்கு மீண்டும் நினைவூட்டியது. களைத்த தேன் கூடாய் எழுந்து பறக்கும் பலநூறு நினைவுகள். புதையலை வழியில் தொலைத்தவன் போல வெறியுடன் ஊரைச் சுற்றி வருகிறேன். என் ஊரே இன்று எனக்கு அந்நியமாய்த் தெரிகிறது. ஊரே கதி என்று நான் வாழ்ந்த காலத்தில் எதெல்லாம் என் ஊரின் முகம் என்று எனக்கு தோன்றியதோ அதிலெல்லாம் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து மாற்றி விட்டர்கள். இந்த புதிய முகம் முன்பை விட அழகாக இருந்தாலும் இது எனக்கு அந்நியமானதே.   என் பள்ளி இன்று என் பள்ளியாய் இல்லை. என் நண்பரகள்  யாரும் இன்று ஊரில் இல்லை.  பிரதான சாலை முதல் சந்து பொந்து வரை எல்லாம் வேறு வேறாய். அன்று ஒவ்வொரு சந்தையும் அடையாளப்படுத்திய பல வயதான முகங்கள் தாங்கள் மடிந்த செய்தியை மட்டும் மிச்சம் வைத்து காணாமல் போ