அன்னமய்யா
தென்னிந்திய திரையுலகில் கொஞ்சம் வித்தியாசமானவர்கள் தெலுங்கு மக்கள். காதலோ- மோதலோ, செண்டிமெண்டோ- காமடியோ மிகை உணர்ச்சிகளுக்கு பெயர் போனது டோலிவுட். தமிழ் ஹீரோ 20 பேரை அடித்தால் தெலுங்கு ஹீரோ 50 பேரையாவது அடிப்பார். தமிழ் ஹீரோ காதலுக்காக நாக்கை அறுத்தால் தெலுங்கு ஹீரோ கழுத்தை அறுத்துக் கொள்வார். மிகை உணர்ச்சிகள் தமிழ் மக்களுக்கும் பிடித்தவைதான் என்றாலும் டோலிவுட் ரசனைக்கு அவர்கள் இன்னும் வளரவில்லை என்றுதான் தோன்றுகிறது. மிகை உணரச்சிப் படங்களின் மீது என் குழந்தை பருவத்தில் இருந்த ஈர்ப்பு, பதின் பருவங்களில் வடிய தொடங்கியது. தெலுங்கு படங்களுடன் என் அறிமுகம் அன்று அதிகம் இல்லை, (இன்றுவரை குறைவுதான்!) என்றாலும் பார்த்த சில படங்கள் என்னை மிரண்டு ஓட வைத்திருக்கின்றன. அதே காலகட்டத்தில் பின் ஒருநாள் எதேச்சையாக ஏதோ ஒரு தெலுங்கு சேனலில் அன்னமய்யா படத்தை பார்த்தேன். நாகர்ஜுன் நடித்தது. அவர் ரட்சகன் மூலம் எனக்கு அறிமுகமாகி இருந்தார். ஆக்சன் படங்களில் ஈடுபாடு மிகுந்த அந்த வயதில் ரட்சகன் என்னை கவர்ந்திருந்தது. ஆகவேதான் அன்னமையாவை சற்று அமர்ந்து பார்த்தேன். சற்றைக்கெல்லம் அன்னமையா என்னை ஈர்த்துகொண்டது. இன்று வரை நான்கைந்து முறை பார்த்திருப்பேன் (சேனல்களில்தான்). என் அபிமான தெலுங்கு படங்களில் ஒன்றாக உள்ளது அன்னமய்யா.
தெலுங்கு திரையுலக வழக்கத்திற்க்கு அன்னமய்யாவும் விதிவிலக்கல்ல. அதே அதீத கற்பனை கொண்ட மிகை உணர்ச்சி படம்தான். ஒரு கவிஞனை வலுக்கட்டயாமாக நாகார்ஜுனாவின் கதாநாயக பிம்பத்துக்குள் நுழைத்து அன்னமைய்யாவை தனிப்பெரும் கதானாயகனாக மாற்றி இருப்பார்கள (அவருக்கு ஒரு சண்டை, ரெண்டு டூயட் கூட படத்தில் உண்டு). கடவுள்கள் கேலரியில் இருந்து கிரிக்கெட் பார்ப்பதை போல உலகில் நடப்பதை பார்த்து பேசிக்கொள்ளும் அந்த திரைக்கதை உத்தியும் தமிழுக்கு மிக பழையதே. அவை யாவற்றையும் மீறி படம் என்னை ஈர்த்ததற்க்கு காரணங்கள் இருந்தன. ஒன்று இசை. அன்னமய்யா ஏராளமான பாடல்களை கொண்ட படம். படத்தின் மொத்த நீளத்தில் கிட்டதட்ட 70 நிமிடங்கள் பாடல்கள்தான். இசையமைப்பாளர் யார் என்று தெரியாத நாட்களில் அது இளையாராஜவாகத்தான் இருக்கும் என்று நான் நம்பினேன். ஒரு வரி கூட புரியாத பாடல்களை என்னை மறந்து ரசிக்க வைத்தது அதன் இசை. பின்னாளில் அது கீரவாணியின் இசை என்று அறிந்துகொண்டேன். தெலுங்கில் இன்றுவரை மிக வெற்றிகரமான இசை ஆல்பங்களில் ஒன்று அன்னமைய்யா. இரண்டாவது அந்த படத்தின் திரைக்கதை, இயக்கம். பொதுவாக வாழ்க்கை வரலாறுகள் படமாகும் போது அவை மிகவும் அலுப்பூட்டுவனவாகவே இருக்கும். அதிலும் என்றோ வாழ்ந்த ஒரு கவிஞனின் வாழ்க்கை என்றால்..? ஆனால் அன்னமைய்யாவை சுவாரசியமான பல நாடகீயத் தருணங்களால் கட்டமைத்திருப்பார் இயக்குனர். அனைத்துமே அனேகமாக கற்பனைதான் என்றாலும், தனிதனி தருணங்களின் தொகுப்பாக ஒரு வாழ்க்கையை சுவாரசியப்படுத்தி நம்மை ரசிக்க வைத்திருப்பார். இடையில் மிகத்துல்லியமான இசை, பாத்திரங்களின் தேர்வு என அன்னமய்யாவை பெரும் வெற்றி படமாக மாற்றியிருப்பார் இயக்குனர். குறிப்பாக உச்சகட்ட காட்சி. மிகை கற்பனையின் சுவாரசியத்தின் உச்சம். அதிலும், நாகர்ஜுனா எனும் ஆக்சன் ஹீரோவிடம் அத்தகைய நடிப்பை நான் எதிர் பார்த்திருக்கவில்லை. ராகவேந்திரா படத்தில் ரஜினியின் நடிப்பை அள்ளி தரக்கூடிய நாடகிய தருணம் படம் முழுக்க அனேகமாக இல்லை என்றே சொல்லலாம். அமைந்த ஒரு சில இடங்களிலும், அவர் பின்னாளில் சிட்டி ரோபாவாக நடிக்க பயிற்சி எடுத்திருப்பார். ஆனால், வாழ்நாள் முழுக்க நம்பி பாடிய பரம்பொருளை நேரில் பார்க்கும் பக்தனின் பரவசத்தை அழகாக காட்டியிருப்பார் நாகார்ஜுன். ஒவ்வொரு இனிமையான பாடலுக்கும் அதற்க்கான தருணகளை உருவாக்கி அதனை மேலும் ரசிக்க வைத்திருப்பார் இயக்குனர். பாடல்களை பற்றியும் மேலும் அதிகமாகவே சொல்லலாம். பெரும்பாலும் அன்னமய்யாவின் கீர்த்தனைகள். அந்த வரிகளுக்கு இசை அமைத்து அழகூட்டி இருப்பார் கீரவாணி. கொண்டலனு நெலகொண்ட, கலகண்டி கலகண்டி, ப்ரஹ்மம் ஒக்கட்டே.. பாடல்கள் இன்று வரை தெவிட்டவில்லை. வெகுஜன ரசனையை சீரழிக்காத, அதே சமயத்தில் சாமானியனும் ரசிக்கும் படியாக கதை சொல்லத் தெரிந்தவர்கள் அலுப்பூட்டும் கதைகளையும் ரசிக்க வைத்துவிடுகிறார்கள். அவர்கள் பாராட்டுகுறியவர்களே. அதே கூட்டணியின் படம் சாயிபாபா இந்த ஆண்டில் வெளியாகி இருப்பதாக என் தெலுங்கு நண்பன் மூலம் அறிந்து கொண்டேன். பார்க்க ஆர்வம் இல்லை. பாடல்களை மட்டும் கேட்டேன். சுமார்தான்.

Comments
Post a Comment