தமிழ்

இன்னொரு பிறவினு ஒன்னு இருந்தா நீ ஸ்விட்சர்லாந்த்ல பொற மச்சி..

வேண்டாம்

மலேசியா, சிங்கபூர்?

வேண்டாம்..

மும்பை, டெல்லி டா..?

வேண்டாம் டா..

Atleast, பெங்களூரு?

வேண்டாம் மச்சி.. தமிழ் நாடு மட்டும்தான்..

சிலுத்து போச்சு.. தமிழ் மேல உனக்கு அவ்ளோ பாசமா?

தெரியல.. ஆனா, எனக்கு அது மட்டும்தான் தெரியும். வேற எங்கனா பொறந்து மொழி தெரியாம சாக சொல்றியா?

             உலகத்துல இருக்குற அறிவாளிக பூரா இங்கதாண்டா இருக்கான்..
ஆனா இவனாவது பரவாயில்ல.. இவன் சுயநலம் ரொம்ப வெளிப்படையானது. ஆனா, சில பேர், எதுக்கு கூவறோம்னு தெரியாமலே கூவுறாங்க. தமிழ் மொழிக்கு குறிப்பிட்ட பங்களிப்பு செஞ்சவங்க யாருமே தமிழ், தமிழ்னு இவங்க அளவுக்கு அடிச்சுகிட்டதில்ல. இலக்கிய வாதிகள், மொழி ஆய்வாளர்கள் யாருமே தமிழ் பெருமைய பேசி இருகாங்களே தவிர, தமிழ் மொழி மட்டும்தான்னு பேசினதில்ல. பிற மொழி கலப்பால ஒரு மொழி அழியுமா? அப்டின்னா உலகம் முழுக்க வியாபித்து இருக்குற ஆங்கிலத்த பாருங்க. அந்த மொழியோட பாதி சொற்கள் பிற மொழி வேர் சொற்கள்தான். தமிழ் பிற மொழிகளோட தன்னிலை மாறாம சீரா கலந்ததால தான், தன்னோட சமகால மொழிகள் பல அழிஞ்சாலும் அது இன்னைக்கும் பிள்ளைத் தமிழா இளமையோட இருக்கு. திருக்குறளும் திருவாசகமும் ஆங்கிலத்துக்கு போச்சுனா பெருமையா கத்துவாங்க. பிறமொழி இலக்கியம் தமிழுக்கு எவ்ளோ வந்திருக்குனு கேட்டா வாய தொறக்க மாட்டானுங்க. தமிழோட இன்றைய தலைசிறந்த படைப்பாளிகளோட, சிந்தனியாளர்களோட நூல்கள் 1000 பிரதி கூட விக்கிறதில்ல. ஆனா, நேத்து வந்த நடிகனோட படம் 50 கோடிக்கு விற்பனை ஆகுது.தமிழ் சமூகத்தோட இந்த அறிவு-சுய சிந்தனை வளர்ச்சியின் பல ஆண்டுகால தேக்கத்துக்கு, நம்மோட இந்த முட்டாள் தனமான மொழி அரசியலும் அது சார்ந்த பத்தாம் பசலி தனங்களும்தான் காரணம். பாரதி பிராமணன்னு சொல்லி அவன் புத்தகங்கள இன்னும் எரிக்காம இருகாங்களே, அதுவே ஆச்சர்யம்தான். ஏன்னா, இப்படி ஆரியம்-திராவிடம் பேசியே பல தமிழ் அறிஞர்களோட படைப்புகளை உரு தெரியாம ஆக்கியிருக்காங்க.

              தமிழ் மாணவர்கள் இன்னைக்கு தமிழ்ல சிந்திக்க முடியல. காரணம், தமிழ்ல குறிப்பிட தகுந்த தரமான அறிவியல் நூல்கள் இன்னைக்கு இல்ல.(தேர்வுக்காக மட்டும் உதவுற குப்பைங்கள நான் நூல்னு மதிப்பிட மாட்டேன்). எப்படி வரும்? அறிவியல் நூல்கள மொழி பெயர்க்குற ஒருத்தனுக்கு நல்ல ஆங்கிலம்-தமிழ் புலமையும், அதே சமயத்துல தெளிவான  அறிவியலும் தெரியனும். சிறுபாண்மை ஆங்கில பள்ளிகள் வெளிப்படியா அயல்நாட்டு கூலிகளை தயார் பண்ணுறாங்க. அந்த குழந்தைகளுக்கு தமிழ் பேச வராதுங்குறதுதான் அந்த நிர்வாகிகளுக்கும் அவங்க பெறறோர்களுக்கும் பெருமை. இந்த பிள்ளைங்கள் வளர்ந்து அறிவியல் தமிழ் நூல்கள தருவானுங்கனு எதிர் பார்க்க முடியுமா..? சரி, அரசு பள்ளிகள்? அங்கதான், ஆங்கிலத்த பத்தி பேசுனாலே தார் டப்பாவோட ஓடி வர்ரானுங்களே. உயந்த அறிவியல் கல்வி கூடங்களோட பல தளங்களிலும் இன்னைக்கு மொழி வறட்சிதான் இருக்கு. இங்க மொழினு சொல்றது, தன் சிந்தனைகள அடுத்தவங்களுக்கு தருவதற்கான கருவினு மட்டும் பொருள் கொள்வீர்களாக. ஒரு போது மேடைல பேசத் தயக்கம். ஏதோ ஒரு அலுவலக கடிதத்த எழுதனும்னா பயம்.  இதுகெல்லாம் காரணம் இந்த அற்ப மொழி அரசியல்தான். ஒரு குழந்தைக்கோ மனிதனுக்கோ அவன் சாத்தியப்பட்ட எல்லா மொழிகளையும் கத்துக்க அனுமதியுங்க, அவன் விருப்பபட்டா.  தன்னோட மொழிய அவன் தேர்வு செய்யட்டும். அப்புறம் அவன் சொல்வான், யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்னு. அதை விட்டுட்டு நீங்களே அவனுக்கு தமிழ் மொழிதான் எல்லாம்னு திணிச்சா அது எப்படி அவனுக்கு செரிக்கும், அமுதமாவே இருந்தாலும்?  இன்னைக்கு தமிழ் நாட்டுல தமிழ தூக்கி செங்க்குத்தா நிறுத்த போறன்னு உளறிட்டிருக்குற எவனுக்கும் தமிழும் தெரியாது. பிற மொழிகளும் தெரியாது. தன்னோட அறிவீனத்த மறைக்க தனக்கு அரை குறையா தெரிஞ்ச ஒன்ன, உலகத்துல சிறந்ததுன்னு உளருறான். தமிழ முழுசா தெரிஞ்ச ஆழ்ந்த மொழியறிவாளன், தமிழ் சாதாரண மொழினு சொன்னாலும் அத ஏத்துக்கல்லாம். ஆனா, இந்த மொழியோட அடிப்படையே தெரியாத ஒருத்தன் இதுதான் உலகத்தோட ஒரே சிறந்த மொழினு சொல்றத நம்புனா நாமளும் காலி. நம்ம மொழியும் காலி.

பி.கு: தமிழ் புத்தாண்டு தை மாதம் 1 ஆம் நாளா இருந்தா என்ன? சித்திரை முதல் நாளா இருந்தா என்ன? அதனால தமிழுக்கு என்ன இழப்பு. முக்கியமா நாம தினசரி வாழ்க்கைல  தமிழ் ஆண்ட எங்கயும் பயன்படுத்துறதே இல்ல.(திருமண அழைப்பிதழ்கள் தவிர).  நம்மோட முன்னோர்கள் ஆண்டாண்டு காலமா பின்பற்றி வருகிற ஒன்ன  முழுக்க முழுக்க அரசியல் காரணத்துகாக மாத்தி சொன்னா அதையும் கேள்வி கேக்காம நாம ஏன் ஏத்துக்குறோம்..? அதுக்கு தொண்டை வரள கத்திதான் நாம நம்மோட தமிழ் பற்ற உறுதி செய்யனும்னு என்ன அவசியம் வந்தது. அனைவருக்கும் இனிய ஜெய வருட வாழ்த்துக்கள்.. 

Comments

Popular posts from this blog

அழிவின் ஞானம்

Be Present

கனவுலகம்