ஒப்பீடு
இந்த உலகத்தின் ஒவ்வொரு மனிதனும் தான் ஒரு ஒப்பற்ற உன்னத வாழ்க்கை வாழ்வதாக சக மனிதனை நம்ப வைக்க முயல்கிறான். மாறாக அவன் வாழ்வை சீரழிப்பது அந்த முயற்சிதான் என்பதை அவன் உணர்வதே இல்லை.
நீ ஒரு உயர்ந்த வாழ்க்கை வாழ்வதாக நினைத்தால் முதலில் அதை நீ நம்பு. உன்னில் நீ திருப்தி கொள். அமைதி கொள். அது குறித்து நீ மகிழ்ச்சியாய் இரு. அப்படி உன்னால் இருக்க முடியாவிட்டால் உன் வாழ்க்கை மேலானது அல்ல என்பதை உணர்ந்து கொள். அதை மேலானதாக்க என்ன செய்யலாம் என யோசி.
நீ மேலான வாழ்க்கை வாழினும், கீழான வாழ்க்கை வாழினும் அது உன் வரையில் மட்டுமே, அடுத்தவனுக்கு அதில் துளியும் அக்கறை இல்லை என்பதைப் புரிந்துகொள். அதுவே நீ மேலான வாழ்வை அடைவதற்கான ஆரம்பப் படி.
வாழ்க்கைக்கு ஒப்புமை இல்லை. ஒவ்வொருவர் வாழ்வும் தனித்துவமானது. ஆகவே ஒவ்வொன்றும் தன்னளவில் மேலானதுதான். அதை பிறர் வாழ்வோடு ஒப்பிடும்போதே நீ அதைக் கீழே தள்ளுகிறாய்.
Comments
Post a Comment