On a sudden Death
அவன் திடீரென
இறந்து போனதில்
அதிர்ச்சி அடையாதவரே இல்லை..காரணம்
அவனுக்கு உடல் நலனில்
பொறுப்பும் அக்கறையும்
மிக அதிகம்..
புகை மது கிடையாது..
அனைத்திலும் ஒழுக்கமானவன்..
நேரத்துக்கு உண்பான்
நேரத்துக்கு உறங்குவான்..
*அதிகாலை துயில் எழும்
பழக்கம் உள்ளவன்..
காலையில் உடற்பயிற்சியும்
மாலை யோகாவும் ஒருநாளும் தவறாது..
கடவுள் பக்தி நிறைய உண்டு..
சத்தான உணவுகளைத்
தேடி தேடி உண்பான்..
அறுசுவை ஆகிலும்
உடலுக்கு ஆகாதெனில்
தீண்டவே மாட்டான்..
*பரம்பரை நோய் என்று
எதுவும் இல்லை.
ஆனாலும்
வருடம் தவறாமல்
முழு உடல் பரிசோதனை செய்வான்..
சர்க்கரையும் இரத்த அழுத்தமும்
எப்போதும் சீராக வைத்திருப்பான்..
உள்ளூர் சிரிப்பு சபையில் இருந்தான்..
மனஅழுத்தத்தை அறவே
தவிர்ப்பவன்..
*உணர்ச்சி வசப்பட்டு
எதையும் செய்யாதவன்..
வண்டி ஓட்டும் போதும்
கவனமாகவே இருப்பான்..
அதி வேகம் பிடிக்காது..
விதிகளை மீறுதல்
எப்போதும் இல்லை..
*இப்படி ஒருவன்
எப்படி இறக்க முடியும்??
வருத்தத்தைவிட குழப்பமே
அதிகமாக இருந்தது..
மீண்டும் மீண்டும்
உள்ளே ஒலித்தது
இந்த ஒரே கேள்விதான்..
இப்படிப்பட்டவன் எப்படி
இறக்க முடியும்..??
*நன்கறிந்த மருத்துவர் ஒருவரிடம்
பேசினேன்..
அவனைப் பற்றி
அதிக நேரமெடுத்து
முழுமையாய் விளக்கினேன்..
மு..ழு..மை..யா..ய்..!
இறுதியில் கேட்டேன்..
இப்படிப்பட்டவன் எப்படி
இறக்க முடியும் டாக்டர்?
*டாக்டருக்கு
என்னைப்போல் சிறிதும்
குழப்பமில்லை..
அதிகம் யோசிக்காமல்
அழுத்தமாய்.. தெளிவாய்..
அதே சமயம்
சுருக்கமாய் பதில் தந்தார்..
'என்ன செய்ய.. நேரம் வந்தா
போய்தான சார் ஆகனும்..!?"
-April 2022
Comments
Post a Comment