ஒரே குரல்.. ஒரே பாடல்..
அந்த சிறிய ஒலிப்பதிவில்
அவள் ஏதோ பாடுகிறாள்..என்னவென்று விளங்கவில்லை..
ஆனால் அடிக்கடி கேட்கிறேன்..
சில நேரம் குதூகலமாய்
சில நேரம் வெறுமையாய்
சில நேரம் நிறைவாய்
சில நேரம் துயராய்
சில நேரம் குழப்பமாய்
ஒரே குரல்.. ஒரே பாடல்..
புதிது புதிதாய்
பிறந்து வருகிறது..
இதன் சூட்சமத்தைப்
பிறகொரு நாள் புரிந்து கொண்டேன்..
தெளிந்த வானத்தின்
வெள்ளை மேகமாக
வெறுமனே
காற்றில் ஊர்கிறது
அவள் குரல்..
காணும் கண்களுக்கேற்றபடி
யானையாய்.. எருமையாய்..
மாடாய்.. மனிதனாய்..
-March 2022
Comments
Post a Comment