மலையாய்.. அருவியாய்.. அலைகளாய்..

 

எப்போதும் நிமிர்ந்தே நிற்கிறது
மலை..
எப்போதும் விழுந்தபடியே உள்ளது
அருவி..
நீலக்கடலின் அலைகளோ
விழுவதும்
எழுவதுமாய் இருக்கிறது…
இயற்கையின் துளியாய்
என்னையும்
உணர்ந்த கணத்தில்
நொடியில் எல்லாம் அழகாகிப்போனது..
மலையாய்.. அருவியாய்.. அலைகளாய்.

-February 2022

Comments

Popular posts from this blog

கனவுலகம்

Be Present

அழிவின் ஞானம்