அவள்
விழியினில் மேதினிக் கொளிதரும் தேவியள்
மொழியினில் கிளியினை மிஞ்சுவாள் -இருள்மிகு
வழியினில் கைவிளக் கணையவள்; கருணையில்
அழிவிலாக் கடவுளின் கூறவள்; அறிந்திதை
பழியிலா அவள்கரம் பற்றிடத் தினம்தினம்
ஒழிவிலா கனவுகள் கண்டனன் தோழா நான்..
பரிவினில் தாயவள்; பாரெலாம் ஒளிபெறும்
அறிவினில் இரவியாம்; ஆற்றலில் காளி!
தூயவள் நெஞ்சினில்; துணிந்திடில் பகைவர்க்குத்
தீயவள் திக்கெட்டும் பொசுக்குவள் விழிகளால்;
கலையவள் நெஞ்சினில் நிறைவதில் கவின்மிகு
மலையவள் அன்பிலென் கனவுகள் நிறைப்பதில்..
-March 2020
Comments
Post a Comment