நறுமுகை
அவள் குறித்த எண்ணங்களை
மறக்கிறேன்..
அவள் முத்தங்களை..
அவள் ஸ்பரிசத்தை..
அவளுடனான பொழுதுகளை..
புரியாத அவளின் மொழியை..
அவள் சிரிப்பை..
ஒவ்வொரு நினைவாய்
என்னிலிருந்து
எழுந்து பறந்து
எங்கோ மறைகின்றன..
உறக்கம் விழிதொடும்
ஏதோ ஒரு கணத்தில்,
அவள் வாசம்
நினைவில் எழுகிறது..
அதை ஒன்றும் செய்ய முடியாது..
தலையணை போல
வெறுமனே
அவள் வாசத்தை அணைத்தபடி
உறங்கி போகிறேன்..
கனவினில்,
அறியாத பூக்கள் பல நிறைந்த
நந்தவனத்தில்
நடந்து கொண்டே இருக்கிறேன்..
பூக்களில் அவள் முகம்
தேடியபடி..
-March 2022
Comments
Post a Comment