பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும்..
எழுந்து நின்று கைதட்டி
ஆரவாரிக்கும் கூட்டத்தின் முன்கண்கள் பனிக்க நிற்கின்றான்..
கூட்டத்தின் மத்தியில்
அவன் கண்கள்
நன்றியுடன்
யாரையோ தேடுகின்றது..
முன்பொரு நாள்
கை நீட்டிச் சிரிக்கும்
கூட்டத்தின் முன்
கூசி நிற்கும் ஒரு கணத்தில்தான்
முதன் முதலாய்
அவனைக் கண்டான்..
அன்று முதல்
இன்று வரை
அவன் கைபிடித்தே நடந்திருக்கிறான்..
இதோ, இந்த தூரம் வரை..
அவனைத் தொலைத்து விடக்கூடாது என
மனம் துடித்தது..
தோல்வியில் கிடைத்த அவனை
வெற்றியில் தொலைத்தலாகாது
என நெஞ்சம் அரற்றியது..
இறுதியாக அந்த ஆராவாரக்
கூட்டத்தின் ஓர் ஓரமாய்ச்
சலனமற்ற புன்னகையுடன்
அவன் தேடிய முகத்தைப்
பார்த்தான்..
அவன் தான்..
அதே முகம்தான்..
எப்படி மறக்க முடியும்..
தினம் தினம்
கண்ணாடி முன் நின்றுக்
காணும் முகமாயிற்றே..!
-May 2022
Comments
Post a Comment