பூஜ்ஜியத்துக்கு அருகில்..
'இனி ஒருபோதும் மனம் தளர மாட்டேன்..
இனி ஒரு கணமும் துயர் பட மாட்டேன்..
இனி ஒருதுளியும் கண்ணீர் உகுக்க மாட்டேன்..
இனி ஒரு நொடியும் மனம் சோர மாட்டேன்..'
விதிகள் சமைத்து
வெகுநாட்களாயிற்று..
பின் எதோ ஒரு நொடியில்
மீண்டும்
விழியோரம் துளி கண்ணீர்..
மனதில் ஒரு சோர்வு..
நெஞ்சில் சிறு வலி..
துயரின் மெல்லிய அழுத்தம்..
விதிகள் நினைவுக்கு வந்தபோது
லேசாய் ஒரு புன்னகை..
ஆம்..
என் விதிகள் அப்படிதான்..
என் கணக்கில
பூஜ்ஜியம் என்பது
எப்போதும்
பூஜ்ஜியமே அல்ல..
பூஜ்ஜியத்துக்கு அருகில்..
கூடுமான அருகில்..
-February 2022
Comments
Post a Comment