தீரா முத்தங்கள்..
வார்த்தைகள் தீர்வதில்லை..
உன் உரு எதிரிருக்கையில்
விழிகள் சலிப்பதில்லை..
உன் குரல் ஒலிக்கும் கணங்களில்
உலகம் நிசப்தமாகி
மீண்டும் சலசலக்கிறது..
எல்லாம் இப்படி மேலுமேலுமாய்
பல்கிப் பெருக,
உன்னுடனான
பொழுதுகள் மட்டும்
ஏன் இத்துனை எளிதாய்த்
தீர்ந்து போகிறது?
திரும்பும் வழிதோறும்
இதழ்களில் கனக்கிறது
என் எஞ்சிய முத்தங்கள்,
மழை ஓய்ந்தபின்
இலைகளில் தங்கும் நீர்த் துளிகளாய்..
என்னதான் செய்வதவற்றை?
நீயே சொல்லேன்..
-February 2022
Comments
Post a Comment