அனிதாவும் கோரக்பூர் குழந்தைகளும்

அனிதா இறந்தது
NEET தேர்வினால் அல்ல..
எனத் தொடங்கி
உரத்துப் பேசுகிறான் ஒருவன்
அனிதாவால் NEET ல்
மதிப்பெண் வாங்க முடியவில்லை..
அந்த விரக்தியில் தன்னை
மாய்த்துக் கொண்டாள்
எனத் தர்க்கப் பூர்வமாக
நிறுவிவிட்டதாக நினைக்கிறான்..
அந்த மகிழ்ச்சி அவன் குரலில்
ஒளிர்கிறது..
பெருமையில் அவன் தோள்கள்
விம்முகிறது..
'இனெபிலிட்டி..!'
எனும் வார்த்தையை சத்தமாகக் கூறி தன் வாதத்தை நிறைவு செய்கிறான்..
மக்கள் கை தட்டுகின்றனர்
கூட்டத்தோடு அமர்ந்திருந்த
என் மனத்தில் பதட்டம் சூழ்கிறது..
பொழுதுபோக்குக்கென நடக்கும்
இந்த வாத நிகழ்ச்சியில்
அடுத்து அவன் கோரக்பூர் குழந்தைகள் இறப்பைப் பேசுவான்..
குழந்தைகள் செத்தது ஆக்ஸிஜன்
பற்றாக்குறையால் அல்ல
அவைகளால் சுவாசிக்க முடியாததால்..
இனெபிலிட்டி என்று நிறுவுவான்..
மக்களும் கைத் தட்டுவர்..

Comments

Popular posts from this blog

அழிவின் ஞானம்

Be Present

கனவுலகம்