கடந்து போதல்
இந்த உலகம்
கொஞ்சம் நல்லவர்களாலும்
கொஞ்சம் கெட்டவர்களாலும்
நிறைய என்னாலும்
சூழப்பட்டுள்ளது..
கொஞ்சம் நல்லவர்களாலும்
கொஞ்சம் கெட்டவர்களாலும்
நிறைய என்னாலும்
சூழப்பட்டுள்ளது..
இந்த உலகம்
கொஞ்சம் அறிவாளிகளாலும்
கொஞ்சம் முட்டாள்களாலும்
நிறைய என்னாலும்
நிறைந்துள்ளது
கொஞ்சம் அறிவாளிகளாலும்
கொஞ்சம் முட்டாள்களாலும்
நிறைய என்னாலும்
நிறைந்துள்ளது
இந்த உலகம்
கொஞ்சம் கடவுளாலும்
கொஞ்சம் சாத்தானாலும்
நிறைய என்னாலும்
ஆக்கப்பட்டுள்ளது
கொஞ்சம் சாத்தானாலும்
நிறைய என்னாலும்
ஆக்கப்பட்டுள்ளது
என் இந்த உலகில்
கொஞ்சம் பேரை நேசிக்கின்றேன்
கொஞ்சம் பேரை வெறுக்கின்றேன்
எஞ்சியுள்ள என்னை
என்ன செய்வதென்று தெரியாமல்
கண்டும் காணாது
கடந்து போகிறேன்
கொஞ்சம் பேரை நேசிக்கின்றேன்
கொஞ்சம் பேரை வெறுக்கின்றேன்
எஞ்சியுள்ள என்னை
என்ன செய்வதென்று தெரியாமல்
கண்டும் காணாது
கடந்து போகிறேன்
Comments
Post a Comment