உச்சத்திற்கும் அப்பால்
மின்னலின்
பேரொளி ஒன்றைப்
பார்த்தபின்
எங்கும்
இருட்டை மட்டுமே
அவன் பார்த்தான்..
பேரொளி ஒன்றைப்
பார்த்தபின்
எங்கும்
இருட்டை மட்டுமே
அவன் பார்த்தான்..
இடியின்
பேரோசை ஒன்றைக்
கேட்டபின்
எங்கும்
மௌனத்தை மட்டுமே
அவன் கேட்டான்..
பேரோசை ஒன்றைக்
கேட்டபின்
எங்கும்
மௌனத்தை மட்டுமே
அவன் கேட்டான்..
அமுதின்
பெருஞ்சுவை ஒன்றை
சுவைத்தபின்
அவன் சுவைத்தவை யாவும்
சாரமற்றே இருந்தன..
அவன் சுவைத்தவை யாவும்
சாரமற்றே இருந்தன..
பெரியவை என்பவை
எல்லாம்
எப்போதும் மேலும்
அடைதலற்ற வெறுமையிலேயே
முடிகின்றன என
இறுதியாய் அவன் உணர்ந்தான்..
எல்லாம்
எப்போதும் மேலும்
அடைதலற்ற வெறுமையிலேயே
முடிகின்றன என
இறுதியாய் அவன் உணர்ந்தான்..
இப்போதெல்லாம்
அவன் பெரியதை
வெறுமனே
அஞ்சி ஒதுங்குகிறான்..
அவன் பெரியதை
வெறுமனே
அஞ்சி ஒதுங்குகிறான்..
Comments
Post a Comment