கடந்து செல்லும் நிகழ்
அந்தப் பழைய ஆல்பத்தைக்
கையில் ஏந்தும் போதெல்லாம்
மனம் மகிழ்ச்சியில்
திளைக்கிறது..
அது ஒரு காலப் பயணம்
என் வீடு முன்பு
இப்படித்தான் இருந்தது..
இது என் பழைய பள்ளி
இது என் பழைய சட்டை
இது எங்கள் பழைய வண்டி
இது நாங்கள் வளர்த்த நாய்
இவர்கள் என் பழைய நண்பர்கள்
இது நான் சென்ற ஒரு பயணம்
ஆல்பம் முடியும் போது
ஒருமுறை பெருமூச்சு விடுகிறேன்
என் இன்றைய நாளை நேசிக்க
இது இன்னும்
எத்துனைப் பழையதாகும் வரை
நான் காத்திருக்க வேண்டுமோ?
Comments
Post a Comment