உள்ளிருந்து மலர்தல்

   

   சம்பவங்கள் அல்லது சகநிகழ்வுகளின் தொடர்ச்சியான கோர்வைதான் காலமாக பரிணமிக்கிறது. நிகழ்வுகள் இல்லாத ஓரிடத்தில் காலம் தன் உரு இழந்து காணாமல் போகும். ஒரு விதத்தில் காலமும் மனமும் ஒன்றுதான். காலத்திற்கு சம்பவங்கள் என்றால், மனத்திற்கு எண்ணங்கள். இடையறாத எண்ண ஓட்டங்களே நம் மனதை அடையாளப்படுத்துகிறது. எண்ணங்கள் ஒருமித்து ஒடுங்கும் ஒரு புள்ளியில் மனம் அழிகின்றது. மனமற்ற நிலை வெறுமை அல்லது ஏகாந்தம். 
    மனமற்ற அந்த நிலையில் பிரபஞ்சப் பருப்பொருட்களிலிருந்து என் சுயம் தன் மாறுபாடுகளை முற்றிலுமாக இழந்து போகின்றது. அது, அவையுடன் கலந்து காணாமல் போகின்றது. அந்த ஒரு புள்ளி வாழ்வின் சம்பவங்களில் அந்தமானது. உண்மையில் அது சுயத்தின் சம்பவமல்ல. சுயத்தின் வெளியில் உள்ள 
ஒன்றின் சம்பவம். சம்பவங்கள் அற்ற சுயத்தின் அந்நிலையில் சுயம் தன் கால பரிமானத்தை முற்றிலுமாக இழக்கிறது. அது ஒருவகையில் தூக்கம் போன்றது  என்றாலும் அது உண்மையில் தூக்கம் இல்லை. தூக்கத்தில் மனம் முற்றிலுமாக ஒடுங்குவதில்லை. மாறாக அது வெறுமனே சற்று ஓய்வு கொள்கிறது. ஆயினும் அது பூரண ஓய்வு அல்ல. கனவுகளில் கால்கள் பாவித்து அது கொள்ளும் நர்த்தனம் தூக்கத்திலும் ஓய்ந்தபாடில்லை.மனக்கடலின் இடையறாத பேராழி தன் மூர்க்கத்தை சற்றே குறைக்கும் நிலை மட்டுமே அது. ஆயினும் மனம் கால பரிமானத்தில் பயமணித்துக்கோண்டேதான் உள்ளது. தூங்கும் மனத்திற்கும் சம்பவங்கள் உண்டு. காலம் உண்டு. ஆனால், எண்ணம் ஒடுங்கியதால் வாய்க்கும் விழிப்பு நிலை தூக்கத்தில் காலம் தன் கால பரிமானத்தை, சம்பவங்கள் இன்மையால் முற்றிலுமாகத் தொலைக்கின்றது. உணமை அமைதியை அப்போதே மனம் உணர்கின்றது. அது ஒரு தீராத வயிற்றுவலிக் காரனின் திடீர் நிவாரணம் அவனுக்கு தரும் ஆசுவாசம் போன்றது. அந்த அமைதியில் மனம் திழைக்கிறது. 

     உண்மையில் அங்கு திழைப்பது ஒடுங்கிய மனம். எனினும் அது எப்போது வேண்டுமானாலும் தன் இயல்புக்குத் திரும்பலாம். அந்த நோயாளிக்கு எப்போது வேண்டுமானாலும் மீண்டும் வயிற்று வலி தொடங்கலாம். மனம் தன் ஒடுக்கத்தை எப்போதும் விரும்புவதில்லை. அது தன்னில் எப்போதும் திருப்திகொள்வதில்லை. காற்றென எப்போதும் விரிவதே அதன் எண்ணம்.     ஒடுங்கும் மிகப் பெரிய விண்மீங்கள் கடைசியில் கருந்துளையை விட்டுச் செல்வதுபோல், மனதை எத்துனை ஒடுக்கினாலும் அது முற்றிலுமாக மறைவதில்லை. அந்த நுண்மை கருந்துளைபோல் வீரியம் மிக்கது. ஈர்ப்பு மிக்கது. வசீரிக்கக் கூடியது. எனவே ஒடுங்கலில் மனதிற்கு பூரண முடிவு இல்லை. எனில் இதற்க்கு மாற்று வழி? நிச்சயம் உண்டு. ஒடுங்கலில் முடியாதது விரித்தலில் முடியும். விரித்தல், இது இயல்பானது. இயல்புக்கு ஏற்றது எனினும் மனம் சுயமாக பூரண விரிவை அடைவதில்லை.அது வெடித்தல் போல் நிகழுதல் வேண்டும். அதற்க்கு உள்ளிருந்து பெருவிசை வேண்டும். ஆகவே அது ஒடுங்கலின் உச்சத்திலேயே நிகழ்கிறது; பிரபஞ்சத்தின் பெருவெடிப்பை போல. ஆகவே ஒடுங்கல் எப்போதும் வெடித்தலிலேயே பூரணம் பெற்று நிறைவுபெறுகின்றது. வெடித்தல் மனத்தை ஒரு புள்ளியில் இருந்து சிதறடிக்கின்றது. பிரபஞ்சத்தின் பெருவழியில் கணப்போதில் விரவிச் செல்ல வைக்கிறது. மனம் இந்த பிரமாண்டத்தில், ஆழியின் துளியாய் தன் சுயம் இழந்து காணாமல் ஆகிறது.இந்த உச்சம் நிலையானது. இனி மனம் திரும்பாது. ஏனெனில் இது மனம் கொள்ளும் இறுதியான மீளாச் சம்பவம். இனி நாம் காண்பது மனமற்ற பூரணம். அதுவே உண்மை சுயம். முடிவான சாட்சி.

Comments

  1. Romba Aazhamaana, Virivaana Vilakkangal Writer Anna..... Ungala Mathiri........
    Vaazhthukkal Writer Anna.....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கனவுலகம்

Be Present

ஓ மனமே..