To my friends..

இந்த வருசத்தோட ஆரம்பத்துல ஒரு டைரி வாங்கினேன். இதே வருசத்தோட ஆரம்பத்துல ஒரு blog-ம்  தொடங்கினேன். பல நேரங்கள்ல நம்மோட கருத்து பரிமாற்றத்துக்கான ஒரு ஊடகம் இல்லாம போறது ரொம்ப சங்கடமான விஷயம் இல்லையா? நம்ம சொல்றத எல்லாம் அமைதியா உள் வாங்கிக்குற ஒரு நண்பனும், நாம கிறுக்குறத எல்லாம் வெளியிடற ஒரு இதழும் கெடைச்சா எவ்ளோ சௌகரியமா இருக்கும்.. அப்டி ஒரு எண்ணத்துலதான், என் மேற்சொன்ன டைரியும், blog-ம். ஆனா பாருங்க, நாயக் கண்டா கல்ல  கானோம், கல்ல கண்டா நாயக் கானோம்னு  சொல்ற மாதிரி டைரி எழுத நேரமோ, blog-la எழுத  பொறுமையோ இல்ல. ஆனாலும், இந்த blog-க்கு உறுப்பினர்கள் விரல் விட்டு எண்ணுகின்ற அளவுக்கு அதிகமா ஆகிட்டதால, ஏதாவது எழுத வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகிப்போச்சு. அதனால வாடிக்கையா இல்லாட்டியும், அவ்வப்போது வேடிக்கையாகவாவது எதையாவது பதிவு செய்யணும்கற முடிவுக்கு வந்துட்டேன். முன்னதாக, இதன் பொருட்டு என் உறுப்பினர்கள் யாரும் தங்கள் உறுப்பினர் அந்தஸ்தை(!) விளக்கிக்கொள்ள  வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.  

ஒரு வழியா உலகம் வெற்றிகரமா டிசம்பர் 21-ஐ  கடந்துவிட்டது. உலகம் அவ்ளோ சுலபமா அழியபோவதில்லனு புரிஞ்சு போச்சு. உலக அழிவு சம்மந்தமா நண்பரகள்கிட்ட பேசும்போதெல்லாம் , என்னால முடிஞ்ச அளவுக்கு உலகம் அழிவதற்கான சாத்தியகூறுகளை எல்லாம்  எடுத்துபோட்டு அவர்களை   பீதியாக்கினேன். இப்போ அவர்கள் எல்லாம் என்னை கொலவெறியோட தேடிக்கிட்டு இருக்குறதா கேள்வி. நான் என்னங்க பண்றது, எதிர்மறையான செய்திகள்தான் அதிகமா கேட்க்கபடுது. 'இன்னைக்கு காலைல சேலத்துல இருந்து கெளம்புன பஸ் ஒண்ணு' னு, ஆரம்பிச்சாவே 'எந்த எடத்துல? எத்தன பேரு?' ன்னு தான் கேக்குறாங்க. 'இல்லடா, அந்த பஸ் பத்திரமா பெங்களூருக்கு போய்டுச்சு' ன்னு சொல்லி பாருங்க, எப்படி திட்றாங்கனு தெரியும். ஆக, நான் சொன்னது அவங்க விரும்பிய கருத்தே தவிர, என்னோட கருத்து இல்லை. அப்போ உன் கருத்து என்னனு கேக்கற அளவுக்கு நீங்க முட்டாள் இல்லன்னு தெரியும். எவனுக்குதான்ங்க  சாக பிடிக்கும்? 
மாயன் காலண்டர் பாத்துருகிங்களா? வட்டமா இருக்கும். வட்டத்துக்கு  ஆரம்பமோ முடிவோ  இல்ல. வட்டமான காலண்டர் என்பதே மறு சுழற்சிக்கான ஒரு  அடையாளம்தான். So, மாயன் காலண்டர்ல 13.0.0.0.0 முடிஞ்சதும் 0.0.0.0.1 தான். இப்போ அது எல்லாருக்கும்தான்  தெரியும்டா.............னு  நண்பர்கள் கொந்தளிக்குறதால இந்த விசயத்த இதோட விட்டுடுவோம். ஆனா, உலகம் இப்போ அழியாததால எப்பவுமே அழியாதுனு நெனைக்க வேண்டாம். இந்த நூற்றாண்டை உலகம் தாண்டுறது கஷ்டம்னு விஞ்ஞானிகள் எச்சரிக்குறாங்க... அதுக்கு என்ன இப்போனு முறைகுறது தெரியுது.. nothing, just  முழிச்சிக்கோ, sunrise குடிசிக்கொனு சொல்றேன்.. அவ்ளோதான்.


Comments

Post a Comment

Popular posts from this blog

அழிவின் ஞானம்

Be Present

கனவுலகம்