குட்டி உலகங்கள்

கடைசியாக அவனும் அவளும்
விளையாடத் தொடங்கினார்கள்..
அவள், வர்ஷினி..
பேசத்தெரிந்த  பார்பி பொம்மை..
அவன், கௌசிக்.
புன்னகைக்க தெரிந்த சின்ன மேகம்...
''என்ன  வெளையாடலாம்?''  இது வர்ஷினி.
''அப்பா அம்மா வெளையாட்டு ?''  இது கௌசிக்.
''நான்தான் உன் அம்மா''  வர்ஷினி.
''சரி, அப்போ நான் உன்னோட அப்பா..!''  கௌசிக்.
தலையாட்டினாள் வர்ஷு.
அவள் அவனுக்கு தாலாட்டு பாடினாள்.
அவன் அவளுக்கு பொம்மை வாங்கி தந்தான்.
அவள் அவனுக்கு தலை வாரினாள்.
அவன் அவளை பள்ளியில் கொண்டு விட்டுவந்தான்.
இனிமையாய் சென்றுகொண்டிருந்த
இந்த சிறிய குடியிருப்பில்
கரடியாய் நீண்டன இரு தலைகள்.
ஒன்று அடுத்த வீட்டு அங்கு தாத்தா.
மற்றது  கௌசிக்கின் அப்பா லிங்கு.
''என்னடா வெளையாடுரிங்க?'' அங்கு தாத்தா.
முந்திக்கொண்டு உற்சாகமாய்  சொன்னான் கௌசிக்,
 ''அம்மா அப்பா வெளையாட்டு தாத்தா..!''
''என்னடா லிங்கு, உன் மகன் டாக்டர் ஆவான்ற நீ..
அவன் அப்பா ஆகணும்கறான் போல..''
லிங்குவை பார்த்து குதர்க்கமாய் கேட்டார் அங்கு..
கடுகடுப்பாய் காதை பிடித்து இழுத்து செல்லப்படும்
கௌசிக்கை,
விஷமமாய் பார்த்து சிரித்தார் அங்கு தாத்தா.
விளங்காமல் பார்த்து விழித்தாள் வர்ஷினி.

Comments

  1. Neraiya Ezhuthunga Writer Anna.... Vaazhthukkal.....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அழிவின் ஞானம்

Be Present

கனவுலகம்