பருவநிலை

பருவநிலையில் கடந்த பதினைந்து நாட்களுக்கும் மேலாய் சேலம் அடையாளம் தெரியாமல் மாறிப்போய்விட்டது. தினசரி மாலை மூன்றிலிருந்து ஆறு மணிக்குள் ஒரு மழை. அதற்காய் நாள் முழுதும் முகம் மூடிக் கிடக்கும் வானம். சூரியன் சுள்ளெனக் காய்வதைக் கண்டே நாட்கள் பலவாகிவிட்டது. 
மோனாலிசாவின் மர்மப்புன்னகை போன்ற இந்த புதிய பருவங்கள் நமக்கு நாளை எதைக் கொண்டு வந்து சேர்க்குமோ.. அதற்காய் இன்றென்ன செய்ய? வெறுமனே இந்த மாற்றங்களை ரசித்தபடி இருக்கின்றேன். இயற்கையின் பாதையில் ஒரு மனிதன் செய்யக் கூடிய ஆகச்சிறந்த காரியம் இதைவிட வேறென்ன இருக்க முடியும்..?

''எனது வீடு எரிந்துபோனதால் 
நன்றாகப் பார்க்க முடிகிறது
உதிக்கும் நிலவை..!''
- ஒரு ஜென் கவிதை

Comments

Popular posts from this blog

கனவுலகம்

Be Present

அழிவின் ஞானம்