Dew drop and few questions

பனித்  துளி: சில கேள்விகள்

# எந்த தேவதைகள் குளிக்க
   இந்த தளிர்கள்
   நீர் சுமந்து காத்திருக்கின்றன?

# பனித்துளி குடித்து
   எப்படி தாகம் தணிந்தது
   சூரியன்?

# ரோஜாக்களின் பருக்கள் மட்டும்
   எப்படி இத்தனை
   அழகாய்..?

# காற்று இரவெல்லாம் விதைத்த
   தானிய முத்துக்களை
   கதிரவன் காலையில்
   அறுவடை செய்கிறானோ?

# தாவரங்களுக்கு  அம்மை!
   தடுப்போசி போட
   எந்த மருத்துவரை
   அழைப்பது?

# பனிகாற்றுக்கு   ரோஜாமேல்
   காதலோ?
   முத்துக்களால்   அலங்கரித்து
   பார்க்கிறதே!

# பனித்துளியே..!
   மலர்மேல் உள்ளவரை
   நீ முத்து..
  கீழே விழுகையிலோ 
  நீ கண்ணீர்..!

# மார்கழி   காலையில்
   புல்வெளியை பார்கின்றேன்..
   ஒரு பூமி மேல்
   எத்துனை பூமிகள்..!

# குழந்தைகளின் .
    கண்ணீரையும்  
   தொடாதவரை
   ரசிக்கின்றேன்..!
  தொட்டால் தெரிந்துவிடுகிறதே;
  அவை பனித்துளி அல்ல,
   உஷ்ணமான  கண்ணீரேன..!   
 


       
        
  
 

Comments

Popular posts from this blog

அழிவின் ஞானம்

Be Present

கனவுலகம்