aravaan

அரவான்  திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது.
சகிக்கவே முடியாத படங்களை பார்த்து நொந்து போயிருக்கையில், சமீப காலமாக  தமிழில் பார்க்க கூடிய படங்கள் வருவது மகிழ்ச்சியாக  இருக்கு. புதிய இயக்குனர்களின் நல்ல படைப்புகளுக்கு நடுவில் (ஆரண்ய காண்டம், மௌனகுரு,  காதலில் சொதப்புவது எப்படி...) வெற்றி பட இயக்குனர்களும் அடுத்தடுத்து உயரங்களை  எட்டிடும் படங்களை தருவது திருப்தி.   அந்த வரிசையில் அரவான், எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்திருக்கு. இயக்கம், ஒளிப்பதிவு, கார்த்திக்கின் இசை, கலை இயக்கம் எல்லாத்தையும் தனித்தனியாக பாராட்டலாம்.. பசுபதி, ஆதி உட்பட அனைவரின் நடிப்பும் இந்த வரிசையில் அடக்கம்.. கதைக்கு கருவையும்  , சிறந்த வசனங்களையும் தந்திருக்கிறார் சு.வெங்கடேசன்.  தமிழில் மற்றுமொரு பெயர் சொல்லும் படம்.. சபாஷ் அரவான் டீம்..

*சு. வெங்கடேசனின் காவல் கோட்டம் பற்றி முன்னாடியே கேள்வி பட்டிருந்தேன். இப்பொழுது  படிக்க ஆர்வம் அதிகமாகி உள்ளது.
*கதாநாயகியோட வசன உச்சரிப்பு, இருநூறு வருஷத்துக்கு முந்தைய தமிழில் இன்றைய தமிழின் அதிகபட்ச  தாக்கம், முழு நிலா நாளில் களவுக்கு செல்வது போன்ற காட்சி மாதிரியான விஷயங்களில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.
* மாற்று   பலி தந்த பிறகும் கரிகாலன் ஏன் ஆதிய அடிச்சு இழுத்துட்டு போறாரு, கடைசி காட்சிய ஏன் ஏசு கிறிஸ்துவோட சிலுவைப்பாடு மாதிரி படமாக்குனாங்கன்னு தெரியல ( Passion of the christ)
*முத்துகுமாரோட "ஊரே ஊரே என்ன பெத்த ஊரே " வரிகள் அருமை.
* சுருக்கமாக சொன்னால், வசந்த பாலனின் முந்தைய மூன்று படங்களை விட இந்த படம் எனக்கு ரொம்ப  பிடிச்சிருக்கு. தைரியமா போய் பார்க்கலாம் நண்பர்களே..! You won't be disappointed..

Comments

Popular posts from this blog

கனவுலகம்

Be Present

அழிவின் ஞானம்