பனித்துளி: சில கேள்விகள்
பனித்துளி: சில கேள்விகள்
* எந்த தேவதைகள் குளிக்க
இந்த தளிர்கள்
நீர் சுமந்து காத்திருகின்றன ?
* பனித்துளி குடித்து
எப்படி தாகம் தணிகிறான்
சூரியன் ?
* ரோஜாக்களின் பருக்கள் மட்டும்
எப்படி இத்தனை அழகாய் ?
* தாவரங்களுக்கும்
அம்மை வருமோ ?
* பனிக்காற்றுக்கு
புற்கள் மேல் என்ன காதல்..?
முத்துகளால் அலங்கரித்து
பார்க்கிறதே.. !
* மார்கழிக் காலையில்
புல்வெளியைப் பார்க்கின்றேன்..
ஒரு பூமிமேல்
எத்தனை பூமிகள்..!
* இரவெல்லாம்
காற்று விதைத்த
முத்துக்களை
காலையில் கதிரவன் ஏன்
அறுவடை செய்கிறான்..?
* இந்த பனித்துளிகள்
மலர்மேல் உள்ளவரை
வைரமாயும்
கீழே விழுகையில்
கண்ணீராயும்
தெரிவது ஏன்.. ?
Nice Writer Anna........ Vaazhthukkal...........
ReplyDelete