அழிவின் ஞானம்
காளி தேவியை நரேந்திரர் ஏற்றுக்கொண்டதை ஸ்ரீராம கிருஷ்ணர் மிக முக்கியமான ஒரு நிகழ்ச்சியாகக் கருதினார். ஏன்? காளி-மயானம், சுற்றிலும் எரிகின்ற பிணங்கள், பேய்களின் கோரத் தாண்டவம், நரிகளின் ஊளைச் சத்தம், விரித்த கூந்தல், ரத்தம் சொட்டத் தொங்கும் நாக்கு, மனிதத் தலைகள் கோர்த்த மாலை, கையில் ரத்தம் சொட்டும் வாள், வெட்டப்பட்ட தலை, சிவபெருமானின் மார்புமீது நிற்கின்ற கோலம் இது அவளது தோற்றம்! வாழ்க்கையின் மறுபக்கத்தைக் காட்டுகின்ற ஒரு சின்னமாக விறங்குகிறாள் அவள். இன்பமும் இதயமும் இனிமையும் அழகும் ஆனந்தமும் மட்டும் கலந்தது அல்ல வாழ்வு. வாழ்விற்கு மறுபக்கம் ஒன்று உள்ளது. துன்பமும் துயரமும தீமையும் கோரமும் அழுகையும் நிறைந்தது அது. அது எங்கிருந்து வந்தது? சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளிலேயே அதனைக் கேட்போம். தீமை ஏன் உள்ளது? இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரே வழி நன்மை, தீமை இரண்டையும் கடவுள் படைத்தார் என்று கொள்வதே...... இறைவன் எப்போதும் நல்லவரேயானால், அந்தத் தீமையனைத்திற்கும் பொறுப்பாளி யார்? சாத்தான் என்று ஒரு பேர்வழி இருப்பதாகக் கிறிஸ்தவரும் முகமதியரும் கூறுகின்றனர். இரண்டு பேர...
Nice Writer Anna.......
ReplyDeleteUnmaiyana Veeram........