தேடல்

ஏதுமற்ற இந்த
இருண்ட பாழ் வெளியில்
ஒரு பைத்தியத்தின் தீவிரத்துடன்
பலகாலமாய்த்
தேடிக் கொண்டிருக்கிறேன்,
அறுந்த என் தொப்புள் கொடியின் நுனியை..
என்றானும் ஒருதினம்
மீண்டும்
என் கருப்பைக்கே திரும்பிவிடலாம்
எனும் பேராசையுடன்

Comments

Popular posts from this blog

விடியல்

aravaan

ஓ மனமே..